Tamil Nadu CM Stalin 14 Announcement: தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தலையொட்டி, அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில், அனைத்து கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, அதிமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. தவெக தலைவர் விஜயும் ஒவ்வொரு மேடையில் அறிவிப்புகளை வெளியிடுகிறார். இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 6) அடுத்த 5 ஆண்டு வளர்ச்சிக்கான 14 அறிவிப்புகளை Stalin statement என்ற பெயரில் வெளியிட்டார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 14 அறிவிப்புகள்
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்த 14 அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். வீட்டு வசதி, மருத்துவம், விவசாயம், பள்ளிக்கல்வித்துறை, உயர்க்கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஊரக வளர்ச்சி, தொழில் துறை உள்ளிட்டவற்றில் முதல்வர் ஸ்டாலின் 14 அறிவிப்புகளை வெளியிட்டார்.
1. 2030-ஆம் ஆண்டிற்குள் கிராமப்புறங்களில், 'கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஐந்து இலட்சம் வீடுகளும், நகர்ப்புறங்களில் இரண்டு லட்சம் வீடுகளும் கட்டி, தேவைப்படும் ஒவ்வொரு குடும்பத்தின் கைகளிலும் சாவியை ஒப்படைப்போம்.
2. நலமுடன் தமிழ்நாடு 2030 தேவைப்படும் அனைவருக்கும் போதிய மருத்துவக் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல், மூன்று முக்கிய திட்டங்களும் இருக்கிறது.
3. வேளாண்மை செழிப்பின், கண்ணியத்தின். வளர்ச்சியின் அடையாளம்! நிகர சாகுபடி பரப்பு 50 இலட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும்.
4. உணவு உற்பத்தி 125 இலட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டு, ஆயிரம் மதிப்பு கூட்டல் மையங்கள் நிறுவப்பட்டு, ஒரு இலட்சத்து 25 ஆயிரம் உழவர்களுக்கு வேளாண் கருவிகள் வழங்கப்படும்.
5. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 2030-க்குள் நூறு விழுக்காடு 'Smart Class Room' அமைக்கப்படும்! 300-க்கும் மேற்பட்ட நூலகங்கள் 'Library 5.0' என்ற புரட்சிகர நவீன அறிவுக் கோட்டைகளாக மலரும்.
6. முக்கியமாக, ஆயிரம் மாதிரிப் பள்ளிகள் 'வெற்றிப் பள்ளிகள் திட்டம்' மூலம் விரிவுபடுத்தப்படும்.
7. ஆராய்ச்சியும், புதுமையும் செழிக்க மைய ஆய்வகங்களும், Center of Excellence எனும் தொழிற்கல்வி சிறப்பு மையங்களும் நிறுவப்படும். செயற்கை நுண்ணறிவு (AI), கல்வியுடன் இணைக்கப்படும். ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் A.I. ஆய்வகம் உருவாகும்.
8. பன்னாட்டு பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் வேர்விட்டு, நம் மாணவர்கள் உலக அரங்கில் போட்டியிடுவதற்கு வழி வகுக்கப்படும்.
9. சிறுபான்மை சமூகத்தினர் வணிகம் மற்றும் தொழில் தொடங்க கடன் பெறும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும். 2030-ஆம் ஆண்டுக்குள், வீட்டு மனையற்ற ஒவ்வொரு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின குடும்பத்திற்கும் வீட்டு மனைப் பட்டா வழங்கிட படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆதி திராவிட மற்றும் பழங்குடியின பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை பெருக்குவதற்கான திட்டங்களும் விரிவுபடுத்தப்படும்.
10. 2030-ஆம் ஆண்டில், நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் முழுமையான மழைநீர் வடிகால் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, நகர்ப்புற நிலங்களில் குறைந்தது 3 விழுக்காடு "Sponge City" உட்கட்டமைப்பாக மாற்றப்படும்.
11. சென்னை மற்றும் அனைத்து மாநகராட்சிகளிலும் நவீன கலாச்சார மையங்கள் அமைக்கப்படும்.
12. நவீன சாலை தொழில்நுட்பம், A.I. கண்காணிப்பு, Intelligent Transport Systems ஆகியவற்றால் நம் பாலங்கள், சாலைகளின் ஆயுட்காலம் நீட்டிக்கப்படும். விபத்துகள் குறைக்கப்படும்.
13. நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, அவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி. உற்பத்தியை பன்மடங்காக்கி, அவற்றை ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் ஏற்படுத்தித் தரப்படும்.
14. தேசிய G.I. பதிவு பெற்ற தமிழ்நாட்டின் கைத்தறி வகைகள் மற்றும் சர்வதேச கண்காட்சிகளில் பெருமையுடன் காட்சிப்படுத்தப்படும்
மேலும் படிக்க: வெளுக்கப்போகும் மழை.. இந்த 2 மாவட்டங்கள் உஷார்! வானிலை அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









