குட் நியூஸ்! ஓய்வூதியம் அதிரடி உயர்வு.. முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு

Tamil Nadu Government Anganwadi Employee Pension Hike: சத்துணவு ஊழியர்கள், அங்கான்வாடி பணியாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.2000ல் இருந்து ரூ.3,400 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   

Written by - Umabarkavi K | Last Updated : Jan 24, 2026, 12:19 PM IST
  • அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு
  • கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மேலும் ஒரு லட்சம் வீடுகள்
  • முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
குட் நியூஸ்! ஓய்வூதியம் அதிரடி உயர்வு.. முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு

Tamil Nadu Government Anganwadi Employee Pension Hike: 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையில், 2026ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜனவரி 20ஆம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில்,  முதலில் தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி, ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் அவையில் இருந்து வெளியேறினார். தொடர்ந்து, 3 நாட்கள் சட்டப்பேரவை நடந்த நிலையில், ஆளுநர் உரைக்கு முதல்வர் ஸ்டாலின்  இன்று பதிலளித்து வருகிறார். 

Add Zee News as a Preferred Source

சத்துணவு,  அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு

அதன் ஒரு பகுதியாக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 24) முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். குறிப்பாக, ஓய்வூதியம் தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.  அதன்படி, அங்கன்வாடி பணியார்களுக்கு ஓய்வூதியம் 3,400 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். ரூ.2,000-லிருந்து, ரூ.3,400ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதன் மூலம், அவர்களது நீண்ட நாள் கோரிக்கை ஒன்று நனைவாகி உள்ளது. மேலும், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வன களப்பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 200 ரூபாயாகவும், பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாயாகவும், அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை 50 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக ஆயிரத்து 200 ரூபாயும், மேலும், சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வன களப்பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு, குடும்ப ஓய்வூதியமாக ஆயிரத்து 100 ரூபாயும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டல், இறந்த பணியாளர்களின் இறுதி சடங்குகளுக்கு ரூ.20,000 வழங்கப்படும் என கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகள்

தொடர்ந்து,  பகுதி நேர ஆசிரியர்கள் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். பகுதி ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அவர் இந்த  அறிவிப்பை வெளியிட்டார். அதாவது,  ஆசிரியர்களின் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்போது, பகுதி நேர ஆசிரியர்களின் பணிக்காலத்தை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

மேலும், ரூ.1,088 கோடியில் 2,200 கி.மீ நீளமுள்ள ஊரச் சாலைகள் மேம்படுத்தப்படும். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3,500 கோடியில் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும். அரசு ஆசிரியர்களின் பணி நிறைவின்போது,  ஒட்டுமொத்த தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

மேலும் படிக்க:கல்லூரி மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு!

 மேலும் படிக்க: நெருங்கும் தேர்தல்! டார்கெட் செய்யப்படும் முக்கிய அமைச்சர்கள்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

 

About the Author

Trending News