இந்தியா கடன் ரூ.181 லட்சம் கோடி! பாஜக அடித்த கமிஷன் எவ்வளவு அண்ணாமலை? தங்கம் தென்னரசு பதிலடி

Minister Thangam Thenarasu | தமிழ்நாட்டின் கடனை சுட்டிக்காட்டி விமர்சித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சூடான பதிலடியை கொடுத்திருக்கிறார்.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Mar 3, 2025, 05:16 PM IST
  • இந்தியாவின் கடன் ரூ.181 லட்சம் கோடி
  • எவ்வளவு கமிஷன் அடித்தீர்கள் அண்ணாமலை?
  • அமைச்சர் தங்கம் தென்னரசு சூடான பதிலடி
இந்தியா கடன் ரூ.181 லட்சம் கோடி! பாஜக அடித்த கமிஷன் எவ்வளவு அண்ணாமலை? தங்கம் தென்னரசு பதிலடி

Annamalai vs Thangam Thenarasu : எக்ஸ் தளத்தில் தமிழ்நாட்டின் நிதிச்சுமை மற்றும் கடனை பற்றி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில், 2021 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது கமிஷன் அடித்தே 5 லட்சம் கோடிக்கு தமிழ்நாட்டை கடனாளி மாநிலமாக ஆக்கியுள்ளீர்கள் என்றீர்கள், இப்போது தமிழ்நாட்டின் மொத்தக் கடன் 9.5 லட்சம் கோடி ரூபாய், நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு திரு.மு.க.ஸ்டாலின் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த தமிழ்நாட்டு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, 2024 ஆம் ஆண்டு திமுக - காங்கிரஸ் ஆட்சியின்போது 55 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் இப்போது 181 லட்சமாக உள்ளது. அதனால் நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு என கேட்கலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

Add Zee News as a Preferred Source

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போட்டிருக்கும் பதிவில், " இந்த மாதம் 14ஆம் தேதி, வரும் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது. இந்த ஆண்டு நிறைவு பெறும் போது, தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியிருக்கும். கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, அன்றைய எதிர்கட்சித் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசிய காணொளி ஒன்றை இன்று பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. கமிஷன் அடித்தே 5 லட்சம் கோடிக்கு தமிழகத்தை கடனாளி மாநிலமாக ஆக்கியுள்ளார்கள் என்றீர்கள் அன்று. இன்று மொத்தக் கடன் 9.5 லட்சம் கோடி ரூபாய். நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு, திரு மு.க.ஸ்டாலின்?" என கேள்வி எழுப்பியுள்ளார். 

இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, " 2014ஆம் ஆண்டு 55.87 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் சுமை தற்போது 2025 ஆம் ஆண்டு 181.74 லட்சம் கோடியாக மாறியிருக்கிறதே, அப்படியென்றால் நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு என்று திருப்பிக் கேட்கலாமா?. தமிழ்நாட்டின் மீது உண்மையில் உங்களுக்கு அக்கறை இருந்தால், உங்கள் கட்சியின் அமைச்சர்களிடம் கேட்டு தமிழ்நாட்டிற்கு நிலுவையில் இருக்கும் கல்வி, நூறு நாள் வேலைத் திட்டம் உள்ளிட்டவற்றிற்கான நிதியைப் பெற்றுத் தாருங்கள். கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு மு.க.ஸ்டாலின், அவர்களின் தலைமையில் தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சியை ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை 2025 பாராட்டியிருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் அவதூறை மட்டுமே பரப்புவது உங்களது அரசியல் முதிர்ச்சிக்கான  போதாமையையே காட்டுகிறதே தவிர வேறல்ல." என பதவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | தமிழக அரசு புதிய உத்தரவு.. இலவச வேட்டி-சேலை வாங்காதவர்கள் ரேஷன் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்

மேலும் படிக்க | நாகை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. 6 முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News