Tangedco Electricity Bill: தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாரத்தை கணக்கிட்டு மின் கட்டணத்தை வசூலித்து வருகிறது. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் நுகர்வோர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. மின்வாரியத்தில் நிதி சிக்கல் எதுவும் இல்லாமல் இருப்பதற்காக, அந்தந்த மாநில அரசு மின் கட்டணத்தில் ஆண்டுதோறும் மாற்றத்தை கொண்டு வருகிறது.
மின் கட்டணம் உயர்ந்தால் என்ன செய்யலாம்?
தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணத்தில் ஆண்டுதோறும் சில மாற்றங்களை செய்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் 100 யூனிட் வரை மின்கட்டணம் இலவசம் தான். அதேபோல, 200 யூனிட் வரை பயன்படுத்துவோரும் அதிக அளவில் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருக்காது. ஆனால், 300 - 350க்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோர்கள் கணிசமான முறையில் மின் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
இதற்கிடையில், சமீப காலமாக வீடுகளில் வழக்கத்தை விட, மின் கட்டணம் அதிகரித்துள்ளதாக நுகர்வோர்கள் பலர் கவலை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இதுபோன்ற நேரத்தில், நுகர்வோர்கள், மின்வாரியத்தை அணுகி புகார் தெரிவிக்கலாம் என மின்வாரியம் கூறியுள்ளது. மின் கட்டணம் அதிகரிப்பு குறித்து நுகர்வோர்கள் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட்டு, உங்களது புகார்களை தெரிவிக்கலாம். நேரில் செல்ல முடியாதவர்கள், Tangedco.Gov.In என்ற இணையதளம் வாயிலாக உங்களது புகார்களை தெரிவிக்கலாம்.
இந்த இணையதளத்தில் Consumer Grievance என்ற பிரிவில் பதிவு செய்யும் வசதி உள்ளது. இதன் மூலமும் உங்களது மின் கட்டணம் குறித்து புகார் தெரிவிக்கலாம். மேலும், 1912 என்ற எண் மூலமும் தொலைபேசி வாயிலாக புகார் தெரிவிக்கலாம். பொதுமக்கள் புகார்களை விரைவாக தீர்க்கவும், ஒவ்வொரு மண்டலத்திலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்களது புகார்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
மின் கட்டணம் உயர்வுக்கு என்ன காரணம்?
ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், 60 நாட்களில் ஒருமுறை மின்சார உபயோகம் கணக்கிடப்பட்டு வருகிறது. ஆனால், சில இடங்களில் கணக்கெடுப்பு தாமதமாகியதால், அதாவது, 60 நாட்களுக்கு பிறகு 3 அல்லது 4 நாட்கள் தாமதமாகுவதால், சிலருக்கு கூடுதல் யூனிட் அதிகரித்துள்ளது. சில இடங்களில் 60 நாட்களில் எடுக்க வேண்டிய கணக்கெடுப்பு 5, 6 நாட்கள் தாமதமாகி எடுக்கப்படுவதால், யூனிட் உயர்ந்து, மின்கட்டணம் உயர்வதாக கூறப்படுகிறது.
அந்தவகையில், செப்டம்பர், நவம்பர் மாதத்தில் பல வீடுகளில் வழக்கத்துக்கு மாறாக மின்கட்டணம் உயர்ந்துள்ளதாக நுகர்வோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் தான், வரும் மாதங்களில் இதுபோன்ற நடந்தால், உடனே புகார் அளிக்க வேண்டும் மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், இந்த விஷயத்தில் மின்வாரிய ஊழியர்களிடம் தவறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க: 10ஆம் வகுப்பு படித்தவரா? அரசு தரும் இலவச ஏஐ பயிற்சி - முன்பதிவு செய்வது எப்படி?
மேலும் படிக்க: வயதானவர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்த மிகப்பெரிய பரிசு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









