Tamil Nadu Latest Training Courses: இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை பெறும் நோக்கில், தமிழக அரசு திறன் சார்ந்த பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதனை தொழில முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது செயற்கை நுண்ணறிவு மற்றும் மீடியாவில் ட்ரோன் பயன்பாடு குறித்த பயிற்சி வகுப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பயிற்சிக்கு எங்கு நடைபெறுகிறது, எப்படி முன்பதிவு செய்வது என்பது குறித்து பார்ப்போம்.
ஏஐ செயலி குறித்து இலவச பயிற்சி
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவு வளர்ந்துக் கொண்டே வருகிறது. இதனால், ஏஐ தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வதற்கான ஆர்வமும் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. இதனால், தமிழக அரசு ஏஐ பயிற்சியை வழங்கி வருகிறது. அந்த வகையில், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி செயலியை எப்படி உருவாக்கலாம் என்பது குறித்து 3 நாட்கள் பயிற்சி வழங்கப்படுகிறது. சென்னையில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்த பயிற்சி வகுப்பில் ஏஐ வலைதளங்கள், செயலி உருவாக்குவது, தானியங்கி முறைகளை வடிவமைப்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. மேலும், செயலி உருவாக்கி, அதனை முதலீட்டாளர்கள் முன் சமர்ப்பிப்பது குறித்த திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் மீடியோ ட்ரோன் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. ட்ரோன் பயன்பாடு என்பது தற்போது அத்தியாவசிய தேவையான மாறி வரும் நிலையில், அதற்கான பயிற்சியை தமிழக அரசு வழங்குகிறது. இந்த பயிற்சியில் ட்ரோன் சினிமாடோகிராஃபி, ஏரியல் போட்டோகிராஃபி, டிஜிசிஏ விதிமுறை, விமான பாதுகாப்பு ஆகியவை பற்றியும் கற்பிக்கப்படும்.
எப்போது, எங்கு?
ஏஐ செயலி பயிற்சி நவம்பர் 11ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ட்ரோன் பயிற்சி நவம்பர் 18ஆம் தேதி முதுல் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த இரண்டு பயிற்சியிலும் பங்கேற் விரும்புபவர்கள் 18 வயதை கடந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்பாடு தெரிந்திருக்க வேண்டும். இந்த பயிற்சி தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இடிஐஐ அலுவலக சாலை, சிட்கோ தொழில்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை - 600 032 என்ற இடத்தில் 3 நாட்கள் இரண்டு பயிற்சியும் வழங்கப்படுகிறது.
எப்படி விண்ணப்பிப்பது?
இந்த இரண்டு பயிற்சியிலும் கலந்து கொள்ள விரும்புபவர்கள் WWW.Edit.In என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்ய வேண்டும். இந்த பயிற்சி விவரங்கள் குறித்து மேலும் அறிந்து கொள்ள 9360221280, 9840114680 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
பணி வாய்ப்புகள் இவ்வளவா?
இந்த பயிற்சியின் மூலம் திரைப்படம், தொலைக்காட்சி, மார்க்கெட்டிக், யூடியூப், சுற்றுலா, ரியல் எஸ்டேட், தொழில்துறை புகைப்படம், கார்ப்ரேட் திரைப்படம் உள்ளிட்டவற்றில் பணி வாய்பை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: வயதானவர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்த மிகப்பெரிய பரிசு!
மேலும் படிக்க: ஆதார் பதிவு, பள்ளி குழந்தைகளுக்கு குட் நியூஸ் - தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









