இன்ஜினியரிங் கவுன்சிலிங் : தமிழ்நாடு அரசு முக்கிய அப்டேட் - விண்ணபிக்க நாளை கடைசி நாள்

Tamil Nadu Engineering Counseling : தமிழ்நாடு முழுவதும் இன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். தமிழ்நாடு அரசு இது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Jun 5, 2025, 11:21 AM IST
  • தமிழ்நாடு இன்ஜினியரிங் கவுன்சிலிங்
  • நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்
  • தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
இன்ஜினியரிங் கவுன்சிலிங் : தமிழ்நாடு அரசு முக்கிய அப்டேட் - விண்ணபிக்க நாளை கடைசி நாள்

Tamil Nadu Engineering Counseling : பொறியியல் படிப்புக்கு, அதாவது இன்ஜினியரிங் படிப்புகளுக்கு மாணவர்கள் ஆன்லைன் மூலம் விரும்பும் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், கலந்தாய்வின் முடிவில் மட்டுமே அவர்களுக்கான கல்லூரி குறித்த விவரம் தெரியவரும். இந்த சூழலில் தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் வெளியிட்டிருக்கும் அந்த அறிவிப்பில், பொறியியல் சேர்க்கைக்கு கடந்த 29 நாட்களில் 2,90,678 மாணாக்கர்கள் பதிவு செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு 07.05.2025 அன்று தொடங்கிவைக்கப்பட்டது. 04.06.2025 வரை 2,90,678 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர். 

Add Zee News as a Preferred Source

உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கொடுத்துள்ள அறிக்கை : கடந்த 07.05.2025 அன்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பப்பட்டது. 04.06.2025 மாலை 6 மணி நிலவரப்படி 2,90,678 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர். இதில் 1,27,337 மாணவர்களும், 1,05,395 மாணவிகளும் ஆக மொத்தம் 2,32,732 மாணாக்கர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர். இதுவரை விண்ணப்பிக்காத மாணாக்கர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, வரும் 06.06.2025-க்குள் விண்ணபிக்கவும்.

www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் பொறியியல் சேர்க்கைக்கான தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விண்ணப்ப பதிவு செய்த மாணாக்கர்கள் தங்களது சான்றிதழ்களை 09.06.2025-க்குள் பதிவேற்றம் செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாணாக்கர்களுக்கு ஏதேனும் விளக்கங்கள் தேவைப்படின் தமிழ்நாடு முழுவதும் 110 தமிழ்நாடு பொறியியற் மாணாக்கர் சேரக்கை சேவை மையங்கள் (TFC Centres) நிறுவப்பட்டுள்ளன. அந்த சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம்.

மேலும், 1800 - 425 0110 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.

பொறியியல் கலந்தாய்வு கட் ஆப் மதிப்பெண் ; 

பொறியியல் கலந்தாய்வில் கட்- ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் தரவரிசை வெளியிடப்படும். அதை தொடர்ந்து, கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு விருப்பமான இடங்கள் தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். கட்-ஆப் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் விரும்பும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.  

பொறியியல் படிப்பிற்கு 12ம் வகுப்பு தேர்வின் மாணவர்கள் இயற்பியல், கணிதம், வேதியியல் மதிப்பெண்கள் அடிப்படை யில் கட்-ஆப் கணக்கிடப்படும். கணிதத்தில் 100க்கு எடுத்த மதிப்பெண்கள் அப்படியே எடுத்துகொள்ளப்படும். இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் 100க்கு கொண்டுவரப்படும். தொடர்ந்து, கணிதம், மற்றும் இரண்டு பாடங்கள் 100க்கு பெற்ற மதிப்பெண்கள் சேர்ந்தால் வருவதே கட்-ஆப் மதிப்பெண்கள். 
 
உதாரணத்திற்கு, கணிதம் - 98, இயற்பியல் 89, வேதியியல் 68 என்றால், இயற்பியல் + வேதியியல் மதிப்பெண் கன் சேர்ந்து 100க்கு எடுத்துகொண்டால் 88.5 ஆகும். இதனுடன் கணித மதிப்பெண்கள் சேர்ந்தால் மொத்தம் 185.5 ஆகும். இதுவே கட்-ஆப் மதிப்பெண்கள். இந்த முறைகளின்படியே கட்-ஆப் தேர்வு செய்யப்படுகிறது. கோர் படிப்பு னை தவிர்த்து இதர படிப்புகளுக்கு குறைவான கட்-ஆப் போதுமானதாக கருதப்படுகிறது. எனவே மாணவர்கள் பிற துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளையும் தெரிந்துகொண்டு எதிர்காலத்தில் நல்ல ஊதியங்களை பெற சரியான படிப்பை தேர்வு செய்யுமாறு கல்வியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க | நாளை (ஜூன் 5) கடைசி நாள்.. கிருஷ்ணகிரி மாவட்ட ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

மேலும் படிக்க | கட் ஆப் மதிப்பெண் என்றால் என்ன? அது எவ்வாறு கணக்கீடு செய்யப்படுகிறது தெரியுமா?

மேலும் படிக்க | தமிழ்நாடு அரசு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு வெளியிட்டிருக்கும் 3 முக்கிய அறிவிப்புகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News