பொறியியல் கலந்தாய்வு, துணை கலந்தாய்வு குறித்து தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

பொறியியல் கலந்தாய்வு மற்றும் துணை கலந்தாய்வு குறித்து தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

Written by - Karthikeyan Sekar | Last Updated : Jun 8, 2025, 08:29 AM IST
  • தமிழ்நாடு அரசின் பொறியியல் கலந்தாய்வு
  • அமைச்சர் கோவி செழியன் முக்கிய அறிவிப்பு
  • துணை கலந்தாய்வ நடக்கும் தேதி குறித்து தகவல்
பொறியியல் கலந்தாய்வு, துணை கலந்தாய்வு குறித்து தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு 6 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் சில முக்கிய தகவல்களை மாணவ, மாணவிகளுக்காக வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு 07.05.2025 அன்று தொடங்கி இன்று 06.06.2025 நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்தது. 2,98,425 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர். இதில் 1,33,805 மாணவர்களும், 1,10,363 மாணவிகளும் ஆக மொத்தம் 2,44,168 மாணாக்கர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர். 

Add Zee News as a Preferred Source

விண்ணப்ப பதிவு செய்த மாணாக்கர்கள் தங்களது சான்றிதழ்களை 09.06.2025-க்குள் பதிவேற்றம் செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. B.ARCH படிப்பிற்கான NATA நுழைவுத்தேர்வு ஜுன் இறுதி வாரம் வரை நடைபெற இருப்பதால் B.ARCH படிப்பிற்கான இணையதள விண்ணப்பப் பதிவு மற்றும் சான்றிதழ் பதிவேற்றங்களை 30.06.2025 வரை மேற்கொள்ளலாம். வெளிவந்தவுடன், தமிழ்நாடு HSC துணைத்தேர்வு (Supplementary) முடிவுகள் பொறியியல் மாணாக்கர் சேர்க்கை (TNEA) துணைக்கலந்தாய்வுக்கான (Supplementary Counseling) விண்ணப்ப பதிவு தேதி அறிவிக்கப்படும்.

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள மாணாக்கர்களுக்கு அவர்களின் விளையாட்டு சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி தமிழ்நாடு விளையாட்டு மேம்பட்டு ஆணையம் மூலம் 02.06.2025 முதல் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணி 13.06.2025 வரை நடைபெறும். அவர்களுக்கான கால அட்டவணை விபரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், குறுந்தகவல் மூலமாக ஒவ்வொருவருக்கும் தனியாக அனுப்பபட்டுள்ளது.

மாணாக்கர்களுக்கு ஏதேனும் விளக்கங்கள் தேவைப்படின் தமிழ்நாடு முழுவதும் 110 தமிழ்நாடு பொறியியற் மாணாக்கர் சேரக்கை சேவை மையங்கள் (TFC Centres) நிறுவப்பட்டுள்ளன. அந்த சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம் மற்றும் 1800 425 0110 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார். 

பொறியியல் கலந்தாய்வு கட் ஆப் மதிப்பெண் ; 

பொறியியல் கலந்தாய்வில் கட்- ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் தரவரிசை வெளியிடப்படும். அதை தொடர்ந்து, கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு விருப்பமான இடங்கள் தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். கட்-ஆப் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் விரும்பும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.  

பொறியியல் படிப்பிற்கு 12ம் வகுப்பு தேர்வின் மாணவர்கள் இயற்பியல், கணிதம், வேதியியல் மதிப்பெண்கள் அடிப்படை யில் கட்-ஆப் கணக்கிடப்படும். கணிதத்தில் 100க்கு எடுத்த மதிப்பெண்கள் அப்படியே எடுத்துகொள்ளப்படும். இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் 100க்கு கொண்டுவரப்படும். தொடர்ந்து, கணிதம், மற்றும் இரண்டு பாடங்கள் 100க்கு பெற்ற மதிப்பெண்கள் சேர்ந்தால் வருவதே கட்-ஆப் மதிப்பெண்கள். 
 
உதாரணத்திற்கு, கணிதம் - 98, இயற்பியல் 89, வேதியியல் 68 என்றால், இயற்பியல் + வேதியியல் மதிப்பெண் கன் சேர்ந்து 100க்கு எடுத்துகொண்டால் 88.5 ஆகும். இதனுடன் கணித மதிப்பெண்கள் சேர்ந்தால் மொத்தம் 185.5 ஆகும். இதுவே கட்-ஆப் மதிப்பெண்கள். இந்த முறைகளின்படியே கட்-ஆப் தேர்வு செய்யப்படுகிறது. கோர் படிப்பு னை தவிர்த்து இதர படிப்புகளுக்கு குறைவான கட்-ஆப் போதுமானதாக கருதப்படுகிறது. எனவே மாணவர்கள் பிற துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளையும் தெரிந்துகொண்டு எதிர்காலத்தில் நல்ல ஊதியங்களை பெற சரியான படிப்பை தேர்வு செய்யுமாறு கல்வியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க | இன்ஜினியரிங் கவுன்சிலிங் : தமிழ்நாடு அரசு முக்கிய அப்டேட் - விண்ணபிக்க நாளை கடைசி நாள்

மேலும் படிக்க | இனி அலையவே வேண்டாம்... உங்களை தேடி வரும் தமிழக அரசு திட்டங்கள் - மிஸ் பண்ணாதீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News