மகளிர் உரிமைத் தொகை.... நாடே வியந்து பார்க்கிறது - தங்கம் தென்னரசு பேச்சு

Thangam Thennarasu: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பதிலுரை ஆற்றி வருகிறார்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 21, 2025, 02:11 PM IST
  • ஒவ்வொரு மடிக்கணினியின் விலையும் ரூ.20,000 ஆக இருக்கும் - தங்கம் தென்னரசு
  • அதிமுக தொண்டர்களை அபகரிக்க முயற்சி நடக்கிறது - தங்கம் தென்னரசு
  • சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை ஒன்றிய அரசின் நிதி இல்லாமல் தமிழக அரசு செயல்படுத்த தொடங்கியது - அமைச்சர்
மகளிர் உரிமைத் தொகை.... நாடே வியந்து பார்க்கிறது - தங்கம் தென்னரசு பேச்சு

Tamil Nadu Assembly News: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் கடந்த திங்கட்கிழமை (மார்ச் 17) முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பட்ஜெட் மீதான விவாதத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு (Thangam Thennarasu) இன்று பதிலுரை அளித்து வருகிறார். இந்த உரையில்,"தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை நாடே வியந்து பார்க்கிறது" என குறிப்பிட்டு பேசினார்.

Add Zee News as a Preferred Source

Tamil Nadu Assembly News: எல்லார்க்கும் எல்லாம்

தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,"மகாராஷ்டிராவிலும் இதேபோல் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவில் தேர்தல் முடிந்ததும் 15 லட்சம் பேரை மகளிர் உரிமை தொகை திட்டத்தில் இருந்து நீக்கியது பாஜக அரசு" என்றார். 

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்திற்கு பதிலான கலைஞர் கைவினை திட்டத்திற்கு 7,297 பேர் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். மேலும், விஸ்வகர்மா திட்டத்தைத் தமிழ்நாடு முற்றிலும் நிராகரிக்கும் என்றும் அவர் கூறினார். 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழ்நாட்டை வெற்றிப்பாதையில் முன்னேற்றிக் கொண்டுள்ளோம் எனவும் தங்கம் தென்னரசு பேசினார்.

Tamil Nadu Assembly News: தரமான மடிக்கணினி

மேலும், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் ஒரு மடிக்கணினியை ரூ.10 ஆயிரம் மதிப்பில் வழங்கினால் அது எப்படி தரமாக இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய தங்கம் தென்னரசு,"ஒரு மடிக்கணினி ரூ.20,000 என்ற அளவில், மாணவர்களுக்கு தரமான மடிக்கணினி வழங்கப்படும். அதாவது, ஆண்டுக்கு ரூ.2,000 கோடி இத்திட்டத்திற்கு ஒதுக்குகிறோம். ஒவ்வொரு மடிக்கணினியின் விலையும் ரூ.20,000 ஆக இருக்கும். தங்கமணி மடிக்கணினியின் தரம் குறித்து கவலைப்பட வேண்டாம்" என்றார்.

Tamil Nadu Assembly News: தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கும் நிதி

மத்திய அரசு விடுவிக்கும் நிதி குறித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,"சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை ஒன்றிய அரசின் நிதி இல்லாமல் தமிழ்நாடு அரசு செயல்படுத்தத் தொடங்கியது. முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி சென்று மெட்ரோ திட்டத்தின் நிதி வழங்க வலியுறுத்திய பின்பு தான் ஒன்றிய அரசு நிதி வழங்கியது.

ஒன்றிய அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதியே ஒரே ஆண்டில் உத்தர பிரதேசத்திற்கு வழங்கி உள்ளது. ரயில்வே திட்டங்களுக்காக ஒன்றிய அரசு கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதியை, உத்தரப் பிரதேசத்துக்கு ஒரே ஆண்டில் வழங்கியுள்ளது" என்றார். கடந்த 3 ஆண்டுகளில் ரயில்வே திட்டங்களுக்கு ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு ரூ. 19,608 கோடிதான் ஒதுக்கீடு செய்துள்ளது" என்றார்.

Tamil Nadu Assembly News: செமி கண்டக்டர் துறை குறித்து...

தொடர்ந்து பேசிய தங்கம் தென்னரசு,"உலகில் உள்ள பல நாடுகள் செமி கண்டக்டர் துறையில் போட்டிப் போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகிறது. செமி கண்டக்டர் துறையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக அமைய வேண்டும் என்பதற்காகக் கோவை மண்டலம் மேலும் செழுமை அடையும் என நம்புகிறேன்" என்றார்.

Tamil Nadu Assembly News: அதிமுகவினர் அமளி

மேலும் அதிமுகவினரை நோக்கி "அதிமுகவுக்கான கூட்டல், கழித்தலை சாணக்கியத்தனத்துடன் எங்கோ இருப்போர் போடுகிறார்கள்; அதிமுக தொண்டர்களை அபகரிக்க முயற்சி நடக்கிறது" என மறைமுகமாக பாஜக குறித்து பேசினார். அவரது பேச்சுக்கு பின்னர் அதிமுக உறுப்பினர்கள் அவையில் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர். மேலும், சட்டப்பேரையில் இருந்து வெளியே வந்த பின்னர், நிதி அமைச்சர் அவரது உரையில் வார்த்தை ஜாலத்தை பயன்படுத்தி பேசுகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியிருந்தார்.

மேலும் படிக்க | 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்த குட்நியூஸ்..! வாய்ப்பை நழுவ விடாதீர்கள்..!

மேலும் படிக்க | New Ration Card : புதிய ரேஷன் கார்டு விண்ணப்பத்துக்கு எப்போது ஒப்புதல் எப்போது கிடைக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News