வந்தது புது கண்டீஷன்.. தள்ளுவண்டி கடைகளுக்கு இனி இது கட்டாயம்!

Tamil Nadu Government:  தமிழகத்தில் சாலையோரத்தில் இருக்கும் தள்ளுவண்டி கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை முக்கிய கண்டீஷன் போட்டுள்ளது.  

Written by - Umabarkavi K | Last Updated : Nov 16, 2025, 12:13 PM IST
  • தமிழக அரசு அதிரடி உத்தரவு
  • இனி தள்ளுவண்டி கடைகளுக்கு உரிமம் கட்டாயம்
  • எப்படி பெறுவது?
வந்தது புது கண்டீஷன்.. தள்ளுவண்டி கடைகளுக்கு இனி இது கட்டாயம்!

Tamil Nadu Food Safety Department Mandatory FSSAI For Road Shops: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் தள்ளுவண்டி கடைகள் செயல்பட்டு வருகிறது. இட்லி, தோசை, மதிய சாப்பாடு, பானிபூரி, வடை, சூப், சிக்கன் போன்ற உணவுகள் குறைந்த விலையில் தள்ளுவண்டி கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடற்கரை, பூங்கா  போன்ற பொழுதுபோக்கு இடங்களுக்கு அருகில் தள்ளுவண்டி கடைகள் செயல்பட்டு வருகிறது.

Add Zee News as a Preferred Source

தள்ளுவண்டி கடைகளுக்கு இனி இது கட்டாயம்

சமீப நாட்களாகவே தள்ளுவண்டி கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் தரம் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது.   சாலையோர தள்ளுவண்டி கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுகளில் செயற்கையான  கலர்கள், ஆரோக்கியமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என உணவு பாதுகாப்புத்துறைக்கு தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. 

இதனை அடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்  தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், தமிழக உணவு பாதுகாப்புத்துறை முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் சாலையோரத்தில் இருக்கும் தள்ளுவண்டி கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை முக்கிய கண்டீஷன் போட்டுள்ளது. அதாவது, சாலையோர தள்ளுவண்டி கடைகளுக்கு FSSAI சான்றிதழ் கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது.

FSSAI சான்றிதழ் பெறுவது எப்படி?

அதாவது, சாலையோரத்தில் பானிபூரி, சூப்,  வடை, காலை, மதிய, இரவு உணவு, அசைவ உணவுகள் விற்பனை செய்யப்படும் தள்ளுவண்டி கடைகளுக்கு FSSAI உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.  தள்ளுவண்டியில் உணவுப் பொருட்களை வைத்து விற்பனை செய்யும் உரிமையாளர்கள்  முறையாக உணவு பாதுகாப்புத்துறை விதியின்படி, உரிமத்தை பெற்றிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

தள்ளுவண்டி வைத்து உணவு பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு பாதுகாப்புத்துறை இலவசமாக FSSAI உரிமம் வழங்குகிறது.  எனவே, தள்ளுவண்டி கடைகளை வைத்திருக்கும் உரிமையாளர்கள் ஆன்லைன் அல்லது இ சேவை மையம் மூலமாக உரிமத்தை பெற விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பித்த ஒருசில நாட்களில் உங்களுக்கு கடைகளுக்கு உரிமம் கிடைக்கும். இது முற்றிலும் இலவசமானது தான். 

உரிமம் பெறாமல் உணவு பொருட்களை விற்பனை செய்யப்பட்டாலோ அல்லது சுகாதாரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்தாலோ,  சம்பந்தப்பட்ட தள்ளுவண்டி கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், சம்பந்தபட்ட தள்ளுவண்டி உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது. 

அதோடு, தள்ளுவண்டி கடைகளில் உணவு பாதுகப்பு விதிகளின்படி பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய, மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர்கள் முறையாக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக உணவுப் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது

.மேலும் படிக்க: ஐந்தாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை! பள்ளி ஊழியர் கைது..

மேலும் படிக்க: அடுத்த 3 நாட்கள்... கனமழை இருக்கும்! எங்கு எங்கு தெரியுமா? வானிலை எச்சரிக்கை!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News