)
Tamil Nadu Announced Kalaimamani Awards: 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுளுகளுக்கான கலைமாமணி விருதுகள் மற்றும் பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் அடுத்த மாதம் நடைபெறும் விழாவில் விருதாளர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்.
தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்குவதுடன், பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி பாலசரசுவதி ஆகியோர் பெயர்களில் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. மேலும், சிறந்த கலை நிறுவனத்திற்கு கேடயமும், சிறந்த நாடகக்குழுவிற்கு சுழற்கேடயமும் வழங்கப்படுகின்றன.
தற்போது, 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கப்பட உள்ளது. கலைமாமணி விருது வழங்கக்கோரி வரப்பெற்ற விண்ணப்பங்கள் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் இயல், இசை, நாட்டியம், நாடகம், திரைப்படம், சின்னத்திரை, இசை நாடகம், கிராமியக் கலைகள் மற்றும் இதர கலைப் பிரிவுகள் என கலைப் பிரிவு வாரியாக பிரிக்கப்பட்டு, கலைமாமணி விருது பெறத் தகுதியுள்ள கலைஞர்களைத் தேர்வு செய்திட கலைப் பிரிவு வாரியாக வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டன.
இந்த வல்லுநர் குழுக்களால் அளிக்கப்பட்ட தகுதியுள்ள கலைஞர்களின் பெயர்ப் பட்டியல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, இயற்றப்பட்ட தீர்மானம் மற்றும் பரிந்துரையை ஏற்று 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் பெறும் விருதாளர்களின் பெயர் பட்டியல் இன்று (செப். 24) வெளியடப்பட்டுள்ளது.
கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படும். மேலும் பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் கலை வித்தகர்களுக்கான அகில இந்திய விருதுகளும் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாரதியார் விருது (இயல்) முனைவர் மற்றும் எழுத்தாளர் ந. முருகேச பாண்டியன், எம்.எஸ். சுப்புலட்சுமி விருது (இசை) பாடகர் கே.ஜே. யேசுதாஸ் மற்றும் பாலசரசுவதி விருது (நாடகம்) நடனக் கலைஞர் முத்துகண்ணம்மாள் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகைக்கான காசோலை உடன், 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் வழங்கப்டும்.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் வழங்கப்படும் சிறந்த கலை நிறுவனத்திற்கான கேடயம், சென்னை தமிழ் இசைச் சங்கம் (ராஜா அண்ணாமலை மன்றம்) நிறுவனத்திற்கு அளஇக்கப்பட்டுள்ளது. சிறந்த நாடக் குழுவிற்கான சுழற் கேடயம் கலைமாமணி மதுரை பாலமேடு பகுதியைச் சேர்ந்த எம்.ஆர். முத்துசாமி நினைவு நாடக மன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கூடுதலாக ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
மேலும் 2021, 2022, 2023ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் எஸ். ஜே. சூர்யா, நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, திரைப்பட அரங்க அமைப்பாளர் ஜே. கே. (எ) எம். ஜெயகுமார், திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் ஆகியோர் 2021ஆம் ஆண்டுக்கான கலைமாமணி (திரைப்படம்) விருதை பெறுகிறார்கள்.

நடிகர் விக்ரம் புரபு, நடிகை ஜெயா வி.சி. குகநாதன், பாடலாசிரியர் விவேகா, திரைப்பட செய்தித் தொடர்பாளர் டைமண்ட் பாபு, புகைப்படக் கலைஞர் டி. லட்சுமிகாந்தன் ஆகியோருக்கு 2022ஆம் ஆண்டுக்கான கலைமாமணி (திரைப்படம்) விருது பெற்றுள்ளது.

நடிகர் மணிகண்டன், நடிகர் ஜார்ஜ் மரியான், இசையமைப்பாளர் அனிருத், பாடகி ஸ்வேதா மோகன், நடன இயக்குநர் சாண்டி, செய்தித் தொடர்பாளர் நிகில் முருகன் ஆகியோருக்கு 2023ஆம் ஆண்டுக்கான கலைமாமணி (திரைப்படம்) விருது பெற்றுள்ளது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ