பெண்களுக்கான சூப்பர் திட்டம், 50 சதவீதம் மானியம் உண்டு - தமிழ்நாடு அரசின் அசத்தல் அறிவிப்பு

Tamil Nadu Government Scheme : பெண்களுக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் ஒரு சூப்பர் திட்டம் குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. தகுதியான பெண்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 21, 2025, 03:43 PM IST
  • தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு
  • பெண்கள் உடனே விண்ணப்பிக்கவும்
  • எப்படி விண்ணப்பிப்பது என தெரிந்து கொள்ளுங்கள்
பெண்களுக்கான சூப்பர் திட்டம், 50 சதவீதம் மானியம் உண்டு - தமிழ்நாடு அரசின் அசத்தல் அறிவிப்பு

Tamil Nadu Government : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண் உள்ளிட்ட பல திட்டங்களை பெண்களுக்காக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசு, அவர்களை சுய தொழிலும் ஈடுபட வைக்கும் வகையிலும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இப்போது அது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ள பெண்கள் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், அதற்கு சில நிபந்தனைகளை தமிழ்நாடு அரசு விதித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிவிப்பு : சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, கரூர் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமைக கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு. அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

2025-2026 ஆம் நிதியாண்டிற்காக, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ரூபாய் 10,000/- அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும் போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 5,000/- மானியத் தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தில், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கத் தேவையான சான்றுகள்:

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள மகளிர் கீழ்க்கண்ட சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.
1. தமிழ்நாட்டில் பூர்வீகமாக வசிப்பவராக இருக்க வேண்டும் (பிறப்பிடச் சான்று)
2. வயது வரம்பு – 25 வயதிற்கு மேல் இருத்தல் வேண்டும்
3. பிறந்த தேதிக்கான சான்று
4. திட்டத்தில் முன்னுரிமை பெற வேண்டுமானால் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று (வட்டாட்சியரிடம் பெறுதல் வேண்டும்) சமர்ப்பிக்க வேண்டும்
5.ஆண்டு வருமான வரம்பு ரூ.1.20 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் (வருமானச் சான்று வட்டாட்சியரிடமிருந்து பெறுதல் வேண்டும்)

எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவர்கள் தங்களது விண்ணப்பங்கள் 23.06.2025 முதல் 14.07.2025-ற்குள், மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கரூர் என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். மேலும் திட்டம் தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கரூர் என்ற முகவரியில் விபரம் தெரிந்து கொள்ளுங்கள். மற்ற மாவட்டத்தினர் நீங்கள் வசிக்கும் தாலுகா அலுவலகம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று இந்த திட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். 

மேலும் படிக்க | ஒரே நாளில் வில்லங்க சான்றிதழ் பெறலாம்! எப்படி தெரியுமா? தமிழ்நாடு அரசு கொடுத்த அப்டேட்

மேலும் படிக்க | UPSC தேர்வர்களுக்கு... தமிழ்நாடு அரசு கொடுக்கும் ரூ.25 ஆயிரம்... விண்ணப்பிப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News