நாய் கடித்து உயிரிழக்கும் மாடு, ஆடு, கோழிகளுக்கு இழப்பீடு கொடுக்கும் தமிழ்நாடு அரசு - முழு விவரம்

Tamil Nadu Government : தமிழ்நாடு முழுவதும் நாய் கடித்து உயிரிழக்கும் கோழி, ஆடு, மாடுகளுக்கான இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அறிவித்துள்ளார். 

Written by - Karthikeyan Sekar | Last Updated : Mar 20, 2025, 06:32 AM IST
  • தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு
  • நாய் கடித்து உயிரிழக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு
  • இனி உயர்த்தி வழங்கப்படும் என அறிவிப்பு
நாய் கடித்து உயிரிழக்கும் மாடு, ஆடு, கோழிகளுக்கு இழப்பீடு கொடுக்கும் தமிழ்நாடு அரசு - முழு விவரம்

Tamil Nadu Government Latest Announcemnet : தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி நாய்க் கடியின் காரணமாக உயிரிழக்கும் கால்நடைகளுக்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்குவதாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி புதன்கிழமை அறிவித்தார். சமீப காலங்களில், தெரு நாய்கள் கடித்து வெள்ளாடு, செம்மறி ஆடு, பசு, எருமை, கோழி போன்ற கால்நடைகள் / வளர்ப்புப் பிராணிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்பேரில், இச்சம்பவம் குறித்த விவரங்கள் மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து பெறப்பட்டு கவனமாக ஆய்வு செய்யப்பட்டன.

Add Zee News as a Preferred Source

அதனடிப்படையில், மாநிலத்திலுள்ள கிராமப் பஞ்சாயத்து, பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் விவசாய / கால்நடை விவசாயிகளால் வளர்க்கப்படும் மேற்படி கால்நடைகள் / வளர்ப்புப் பிராணிகள் நாய்கள் கடித்து உயிரிழக்கும் நிகழ்வுகளில் உரிய இழப்பீடு வழங்க பேரிடர் மேலாண்மை நிதியின்கீழ் வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் அடிப்படையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின்கீழ் பின்வருமாறு இழப்பீடு வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டிருந்தார். 

அதன்படி நாய் கடித்து உயிரிழக்கும் மாடு ஒன்றுக்கு 37 ஆயிரத்து 500 ரூபாயும், வெள்ளாடு / செம்மறி ஆடு ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாயும், கோழி ஒன்றுக்கு 100 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என்றும், இதுவரை உயிரிழந்த 1,149 பிராணிகளுக்கு 42 இலட்சத்து 2 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என்றும் 19-3-2025 காலை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், தற்போது முதலமைச்சர் செம்மறி ஆடு, வெள்ளாடு ஆகியவற்றின் உயிரிழப்புக்கு வழங்க அறிவிக்கப்பட்ட 4 ஆயிரம் ரூபாயினை 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியும், கோழி உயிரிழப்புக்கு அறிவிக்கப்பட்ட 100 ரூபாயினை, 200 ரூபாயாக உயர்த்தியும் வழங்கிட அறிவுறுத்தியுள்ளார். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மீண்டும் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க | TN Govt | தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2 முக்கிய உத்தரவு!

மேலும் படிக்க | சென்னை பெண்களுக்கு குட் நியூஸ்..! பிங்க் ஆட்டோ விண்ணப்பம் வரவேற்பு

மேலும் படிக்க | மாதம் ரூ.5000 உதவித்தொகை, மார்ச் 31 கடைசி - 10,12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு கடைசி வாய்ப்பு

மேலும் படிக்க | ரேஷன் கார்டு : அரசு வெளியிட்டிருக்கும் 2 முக்கிய அறிவுறுத்தல்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News