தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் பணியாற்ற விருப்பமா? தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government : தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் பணியாற்றுவதற்கான பயிற்சியை கொடுக்கும் தமிழ்நாடு அரசு, இந்த படிப்பில் சேருபவர்களுக்கு மாதம் 400 ரூபாய் உதவித் தொகையும் கொடுக்கிறது. முழு விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 12, 2025, 09:06 PM IST
  • தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு
  • கோவில்களில் பணியாற்ற விருப்பமா?
  • இசைப்பள்ளியில் இப்போதே சேரலாம்
தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் பணியாற்ற விருப்பமா? தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government Announcement : தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை பெற விரும்புபவர்கள் அரசு நடத்தும் இசைப்பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. தமிழக அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் கரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி தொடங்கப்பட்டு 28 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இசைப்பள்ளியில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலை பிரிவுகளில் முழுநேர வகுப்பாக இசைக்கல்வி சிறப்பாக பயிற்றுவிக்கப்படுகிறது. 3 ஆண்டுகள் முறையான பயிற்சிக்கு பின் அரசு தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
-
தற்போது 2025-2026- ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவ - மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நாதசுரம் தவில் துறைக்கு எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. 13 -வயதிற்கு மேல் 25 - வயதிற்குட்பட்ட ஆண் பெண் இருபாலரும் சேரலாம். மாணவர்கள் பெருமளவில் சேர்ந்து பயன்பெற குறைவான பயிற்சி கட்டணமாக ஆண்டிற்கு ரூ.350/- மட்டும் பெறப்படுகிறது. தொலைவில் இருந்து வரும் மாணவ மாணவியருக்கு தமிழக அரசு இலவசமாக தங்கும் விடுதி வசதி மற்றும் பேருந்துகளில் இசைப்பள்ளிக்கு வந்து செல்வதற்கு இலவச பேருந்து பயண அட்டையும் வழங்கப்படுகிறது. 

தமிழக அரசால் இசைக்கலை வளர இசைப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் தோறும் ரூபாய் 400/- ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இசைப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அரசுத்துறை மற்றும் ஆலயங்களில் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது. வெளிநாடுகளிலும் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. கலை ஆர்வமும் திறமையும் உள்ள மாணவ - மாணவிகள் - 944 ஜவஹர் பஜார் கரூர் என்ற முகவரியில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியின் தலைமை ஆசியர் நா.ரேவதி அவர்களை அணுகி இசைப்பள்ளியில் சேர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ள்ளப்படுகிறார்கள். கைபேசி எண் 9500277994. 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கும் செவித்திறன்குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில் 2025-2026-ஆம் கல்வியாண்டில் முன் பருவப் பள்ளி முதல் பத்தாம் வகுப்பு வரை இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 3 வயது முதல் 15 வயது வரை உள்ள ஆண்/பெண் இருபாலரும் தங்கி பயிலும் வண்ணம் தனித்தனி விடுதி வசதியுடன் கூடிய பள்ளியாகும். இப்பள்ளியில் உள்ள சிறப்பாசிரியர்கள் செவித்திறன்குறையுடையோருக்கு கற்பிக்க சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். தமிழ், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களோடு பேச்சு பயிற்சியும் அளிக்கின்றனர். பள்ளி விடுதியில் மாணவர்களுக்கு உண்ண உணவு, அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், கல்வி உதவித்தொகை மற்றும் மாணவர்களுக்கு இலவச பயணச்சலுகையும் வழங்கப்பட்டு வருகிறது. 

மேலும் கணினி வழி கற்பித்தல், வருடம் ஒருமுறை சுற்றுலாவிற்கு அழைத்து செல்லுதல், மாணவர்களின் விளையாட்டு திறனை அதிகரிக்க விளையாட்டு திடல் உடன் கூடிய பள்ளியாக திகழ்ந்து வருகிறது. மாணவர்களுக்கு விலையில்லா காதொலிக் கருவிகள் வழங்குதல், பேச்சுப்பயிற்சி மற்றும் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சேர்க்கை பெற தலைமையாசிரியர், செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், காஞ்சிபுரம்-631502 என்ற முகவரியில் அணுகவும். விவரம் வேண்டுவோர் 044-27267322 மற்றும் 9597465717 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்! மின்சார வாரியம் அறிவிப்பு!

மேலும் படிக்க | புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் கொடுத்த தமிழ்நாடு அரசு..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News