ரூ.10,000 பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் அறிவித்த தமிழ்நாடு அரசு - யாருக்கு கிடைக்கும்?

Tamil Nadu government : விபத்தில் உயிரிழந்தவர்களை காப்பாற்றியிருந்தால் மத்திய மாநில அரசுகள் இணைந்து ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குகின்றன. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 18, 2025, 06:11 PM IST
  • தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு
  • ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை அறிவிப்பு
  • யாரெல்லலாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?
ரூ.10,000 பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் அறிவித்த தமிழ்நாடு அரசு - யாருக்கு கிடைக்கும்?

Tamil Nadu government : மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றியவர்களை கவுரவிக்கும் விதமாக உதவித் தொகை மற்றும் பராட்டுச் சான்றிதழ் கொடுக்கின்றன. "Good Samaritan" திட்டம் என்ற பெயரில் இந்த மிகப்பெரிய காரியத்தில் ஈடுபடுபவர்களுக்கு இரு அரசுகளும் இணைந்து தலா 5 ஆயிரம் ரூபாய் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குகின்றன. எனவே, இந்த உதவியை யாரேனும் செய்திருந்தால் அவர்கள் இந்த பரிசுத் தொகை பெறுவதற்கு தகுதியானவர். நீங்கள் செய்திருந்தால் கூட இந்த பரிசுத்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக அரசு சார்பில் வெளியாகியிருக்கும் முக்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் அறிவிப்பின் விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

மத்திய அரசின் சாலை போக்குவரத்து (ம) நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசும் இணைந்து "Good Samaritan" திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேற்படி திட்டத்தின் கீழ் சாலை விபத்தின் போது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நபர்களை, "Golden Hour" என சொல்லப்படும் விபத்து நடைபெற்ற ஒரு மணி நேரத்திற்குள் அருகில் உள்ள மருத்துவமனை/சிகிச்சை மையத்திற்கு கொண்டு சேர்க்கும் நபர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் ரூ.5000/- மற்றும் மாநில அரசின் சார்பில் ரூ.5000/- என ஆக மொத்தம் ரூ.10,000/-(ரூபாய் பத்தாயிரம் மட்டும்) பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே செங்கல்பட்டு மாவட்டத்தில் சாலை விபத்தின் போது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நபர்களை "Golden Hour" என சொல்லப்படும் விபத்து நடைபெற்ற ஒரு மணி நேரத்திற்குள் அருகில் உள்ள மருத்துவமனை/சிகிச்சை மையத்திற்கு கொண்டு சேர்த்து மனித உயிர்களை காப்பாற்றும் பணியினை மேற்கொள்ளுமாறும், அவ்வாறு காப்பாற்றியிருப்பின் பரிசுத்தொகை (ம) பாராட்டு சான்று பெற தங்களது பெயர், முகவரி மற்றும் விபத்து குறித்த விவரங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் / சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகுமாறு செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எனவே, இந்த பரிசுக்கு உரிய நபர்களாக கருதிக் கொள்பவர்கள் முறையாக விண்ணப்பித்து பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளவும். இப்போது அறிவிப்பு செங்கல்பட்டு மாவட்டத்தின் சார்பில் மட்டுமே வெளியாகியிருக்கிறது. கூடுதல் தகவல்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்ளவும்.

மேலும் படிங்க: ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. வீடு வீடாக விநியோகிக்கும் சேவையை தொடங்கும் தமிழக அரசு

மேலும் படிங்க: இந்த மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News