)
Tamil Nadu Government : தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு, சிவகங்கை மாவட்ட மக்களுக்காக இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த 10 நபர்களைக் கொண்ட குழுவிற்கு, நவீன சலவையகங்கள் அமைத்திட தகுதிகளின் அடிப்படையில் ரூ.3.00 லட்சம் மதிப்பீட்டிலான மானியத்தொகை வழங்கப்படவுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நவீன சலவையகம் அமைக்க மானியம்
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில், நவீன சலவையகங்கள் அமைக்க
தமிழக அரசு நிதியுதவியுடன் கூடிய புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, நவீன சலவையகம் அமைப்பதற்கு தேவையான
இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையான நிதியில் ரூ.3.00 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க 10 நபர்களைக் கொண்ட ஒரு குழுவாக செயல்பட வேண்டும். குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ரூ.1.00 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (Ministry of Micro, Small and Medium Enterprises) துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். எனவே, குறிப்பிட்டுள்ள திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமும், தகுதியும் உள்ள குழுவினர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில்
அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆயத்த ஆடையகம் அமைக்கும் திட்டம்
ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு ஏற்படுத்திட விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட மக்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரின் பொருளாதார மேம்பாட்டிற்காக, மாறிவரும் சூழலுக்கு ஏற்ப ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு ஏற்படுத்திட தையல் தொழில் தெரிந்த 10 நபர்கள் (ஆண் மற்றும் பெண்) கொண்ட குழுவிற்கு ரூ.3,00,000/- மதிப்பீட்டிலான நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இந்நிதியுதவி பெற விண்ணப்பிக்கும் குழுவினைச் சார்ந்த உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்
மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களாகவும், குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாகவும் இருந்திடல் வேண்டும்.
பெண்களுக்கு முன்னுரிமை
மேலும், குழுவில் உள்ள உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000/-த்திற்கு மிகாமலும், அக்குழுவினை சார்ந்த 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் அவசியம் ஆகும். மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (Ministry of Micro, Small and Medium Enterprises) துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமையும், விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்களால் அமையப்பெற்றுள்ள குழுவிற்கு முன்னுரிமையும் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
எனவே, குறிப்பிட்டுள்ள திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமும், தகுதியும் உள்ள குழுவினர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை உரிய ஆவணங்களுடன் நேரில் அணுகி, விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ