Tamil Nadu Government Special Patta Camp : தமிழ்நாடு அரசு சென்னை மக்களுக்கு ஒரு குட் நியூஸ் வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் அரசு வழங்கிய வீடுகளை பெற்றவர்கள் உடனடியாக அதற்கான பட்டாவை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு முகாம் வரும் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகரம், மணலி புது நகர் திட்டப்பகுதியில் உள்ள பகுதி-1. பகுதி-2 மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவற்றால் மனைகள். வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி பொது மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவ்வாறு ஒதுக்கீடு பெற்று முழுத் தொகையையும் செலுத்திய ஒதுக்கீடுதாரர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் மேலான உத்தரவிற்கு இணங்க மணலி புதுநகர் திட்டப்பகுதியில் ஒதுக்கீடுதாரர்களுக்கு வருவாய் துறையிடமிருந்து நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகியவற்றின் ஒதுக்கீடுதாரர்கள் இச்சிறப்பு முன் முயற்சியை பயன்படுத்தி தாங்கள் வீட்டு வசதி வாரியத்திடமிருந்து மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடமிருந்து வாங்கிய சொத்திற்கு நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு ஏதுவாக தாங்கள் விற்பனை பத்திரங்கள் மற்றும் இதர ஆவணங்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் வருவாய் துறை சார்பாக சிறுவர் மாநகராட்சி பூங்கா, மணலி பகுதி-2ல் வருகின்ற 19.03.2025, 20.03.2025 மற்றும் 21.03.2025 ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 வரையில் நடத்தப்படும் சிறப்பு முகாமில் ஆவணங்களின் நகலினை ஒப்படைத்து பட்டா பெறுவதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு ஒதுக்கீடுதாரர்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஏற்கனவே மேற்காணும் திட்டப்பகுதியில் பட்டா பெறுவதற்கு ஏற்கனவே விண்ணப்பம் அளித்திருந்தால் மீண்டும் விண்ணப்பம் அளிக்க வேண்டாம் எனவும் ஒதுக்கீடுதார்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என இந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஏழை குடும்பங்களுக்கு தமிழக அரசு வழங்கும் சொந்த வீடு! யார் யாருக்கு கிடைக்கும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









