முதியோர், மாற்றுத் திறனாளிகள், விதவை அடையாள அட்டை - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government : முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை அடையாள அட்டைகள் பெற திருநெல்வேலியில் சிறப்பு முகாம் நடத்தப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Mar 9, 2025, 01:35 PM IST
  • தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு
  • திருநெல்வேலியில் நடக்கும் சிறப்பு முகாம்
  • முதியோர், விதவை, மாற்றுத் திறனாளிகள் பயன் பெறலாம்
முதியோர், மாற்றுத் திறனாளிகள், விதவை அடையாள அட்டை - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government Special Camp : தமிழ்நாடு அரசு சார்பில் திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. அம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இதுவரை விதவைச் சான்றிதழ், முதியோர் அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை பெறாமல் இருந்தால், அவர்களுக்காக அரசு சிறப்பு முகாம் ஒன்றை நடத்துகிறது. இந்த முகாமில் கலந்து கொண்டு இந்த அடையாள அட்டை பெற்றுக் கொள்வதுடன் அரசின் ஓய்வூதியம் மற்றும் பராமரிப்பு மானியங்களையும் பெற்றுக் கொள்ளலாம். 

Add Zee News as a Preferred Source

இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், மற்றும் விதவைகள் போன்ற நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு அடையாள அட்டை, அரசு ஓய்வூதியம், பராமரிப்பு மானியங்கள், உதவி உபகரணங்கள், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திறன்
பயிற்சிகள், வங்கி கடன் உதவிகள், மற்றும் வீடு வழங்கும் திட்டங்கள் மற்றும் அரசு உதவி திட்டங்கள் கிடைக்க வசதியாக வட்டார வாரியாக தேவை கண்டறியும் முகாம்கள் நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நடத்தப்படும் இந்த முகாம்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் (ALIMCO) பிரெய்லி கிட். தக்க செயலிகளுடன் கூடிய திறன்பேசி, அட்ஜஸ்டபிள் ஊன்றுகோல். வாக்கிங் ஸ்டிக், ரோலேட்டர் அட்ஜஸ்ட்டபிள், சக்கர நாற்காலி, மூன்று சக்கர வண்டி, மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டி டிஜிட்டல் காது கேட்கும் கருவி. ஆங்கில் புட் ஆர்த்தோசிஸ், இடுப்பு முழங்கால் ஆர்த்தோசிஸ் ஆகிய உதவிகள் வழங்கப்படவுள்ளது.

அதன்படி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் இம்மாதம் 11ம் தேதியும் வள்ளியூர் வட்டாரத்தில் 12ஆம் தேதியும். மானுாரி வட்டாரத்தில் 13ஆம் தேதியும், சேரன்மாதேவி வட்டாரத்தில் 14ஆம் தேதியும், இராதாபுரம் வட்டாரத்தில் 17ம் தேதியும் நாங்குநேரி வட்டாரத்தில் 18ம் தேதியும், பாப்பாக்குடி வட்டாரத்தில் 19ம் தேதியும், மற்றும் களக்காடு வட்டாரத்தில் 20ம் தேதியும் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், பாளையங்கோட்டை வட்டாரத்தில் 15ம் தேதி கேடிசி நகர் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில்(மகளிர் திட்டம்) தேவை கண்டறிதல் முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | இன்றே கடைசி நாள்.. பென்ஷன் வாங்கும் தமிழக ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

மேலும் படிக்க | ரேஷன் கடைகளில் இனி 5 கிலோ கோதுமை கிடையாதா...? அதிர்ச்சி தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News