6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்..! வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க

Tamilnadu government : விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் இருக்கும் 6,7,8 ஆம் வகுப்பு படிக்க இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு ஒரு முக்கியமான குட்நியூஸ் வெளியிட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 6, 2025, 08:13 AM IST
  • தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு
  • 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாய்ப்பு
  • இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளவும்
6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்..! வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க

Tamilnadu government Good News : தமிழ்நாடு அரசு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விளையாட்டுத் துறையில் அதீத கவனம் செலுத்தி வருகிறது. அந்தவகையில் வரும் கல்வி ஆண்டில், விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் இருக்கும் 6,7,8 ஆம் வகுப்பு படிக்க இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு ஒரு முக்கியமான குட்நியூஸ் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி. தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 6 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இம் முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் 06.04.2025 முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. 

Add Zee News as a Preferred Source

முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் சேர விருப்பமுள்ள 6-ஆம். 7-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்புகளில் சேர விரும்பும் 13 வயதிற்க்குட்பட்ட மாணவ, மாணவிகள் ஆன்வைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பதிவு  ஏற்றம் செய்வதற்கான கடைசி நாள்: 3004.2025 அன்று மாலை 5.00 மணி வரை ஆகும். தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மைய அலைப்பேசியினை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரத்தினை பெற்று கொள்ளலாம். 

முதன்மை நிலை விளையாட்டு மையத்தில்/ சேர விரும்பும் மாணவ / மாணவியருக்கான மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் வருகின்ற 02.05.2025 அன்று காலை 7.00 மணியளவில் கீழ்காணும் விபரப்படி நடைபெற இருப்பதால் ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே தவறாது கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான தகவல்கள் குறுச்செய்தி. வாட்ஸ்ஆப் மூலமாக உரியவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

1. தடகளம்(ஆ) & (பெ), குத்துசண்டை(ஆ) பளுதூக்குதல் (ஆ) - ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், சென்னை
2. டென்னிஸ் (பெ) - நுங்கம்பாக்கம். விளையாட்டரங்கம், சென்னை,
3. ஜிம்னாஸ்டிக்ஸ்(ஆ)& (பெ), நீச்சல் (ஆ) & (பெ) - AGB நீச்சல் குசு வளாகம், வேளச்சேரி, சென்னை
4. வில்வித்தை (ஆ), சைக்கிளிங்(ஆ)&(பெ). இறகுபந்து(ஆ) & (பெ) - TNPESU, மேலக்கோட்டையூர், செங்கல்பட்டு.

மாநில அளவிலான தேர்வுகள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் : 02.05.2025, காலை 7.00 மணி (*ஆ -ஆண்கள், பெ -பெண்கள்,)
 
விளையாட்டுத் தகுதிகள்:

தனி நபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாநில (ம) மாவட்ட அளவில் குடியரசு / பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் / அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுக் சங்கங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும், (அல்லது) தமிழ்நாடு அணியில் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் / இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு (SGF) / இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவர்களும், பன்னாட்டு அளவில் அங்கீகாரம் பெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு மற்றும் பதங்கங்கள் பெற்றவர்களும் மாநில (ம) மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பதக்கம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதி பெற ஆவார்கள்.

மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மேலும் படிக்க | புதிய ரேஷன் கார்டு வருமா? வராதா? முக்கிய அப்டேட்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News