ஜல்லிக்கட்டு விதிமுறைகளில் மூன்று மாற்றம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Jallikattu Rules : ஜல்லிக்கட்டு விதிமுறைகளில் மூன்று முக்கிய மாற்றங்களை செய்து தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Written by - Karthikeyan Sekar | Last Updated : Jan 23, 2026, 03:45 PM IST
  • ஜல்லிக்கட்டு விதிமுறையில் மாற்றம்
  • மூன்று முக்கிய விதிகளை திருத்தியது அரசு
  • ஜல்லிக்கட்டு அமைப்பினர் அரசுக்கு நன்றி
ஜல்லிக்கட்டு விதிமுறைகளில் மூன்று மாற்றம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Jallikattu Rules : ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதில் உள்ள சிரமங்களை களையும்பொருட்டு விதிமுறைகளில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக தமிழ்நாடு  அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.  தமிழ்நாட்டில் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதல் என்னும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. ஜல்லிக்கட்டுக்காகவே மதுரை அலங்காநல்லூரில் "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்" அமைக்கப்பட்டு அனைவரும் பெருமைகொள்ளும் வகையில் அங்கே ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.

Add Zee News as a Preferred Source

தமிழ்நாடு அரசு அறிவிப்பு

17-01-2026 அன்று அலங்காநல்லூர் பகுதியில் நடைபெற்ற ஏறுதழுவுதல் போட்டியை பார்வையிட்ட பின் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கு பெற்று அதிகக் காளைகளை அடக்கிச் சிறந்து விளங்கக்கூடிய வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்புத் துறையில் உரிய அரசுப் பணியிடங்களில் பணியமர்த்திட வழிவகை செய்யப்படும் என்றும், உலகப் புகழ் பெற்ற தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கான சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் 2 கோடி ரூபாய் செலவில் அலங்காநல்லூர் பகுதியில் அமைக்கப்படும் என்றும் இரண்டு சிறப்பான அறிவிப்புகளை அறிவித்தார்கள்.

ஜல்லிக்கட்டு விதிமுறையில் மாற்றம்

மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதில் இருக்கும் ஒரு சில சிரமங்கள் அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து அவற்றைப் பரிசீலித்து காளைகளுக்கு எவ்வித துன்பமும் நேராவண்ணமும், ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு இடையூறு இல்லாத வண்ணமும் தமிழ்நாடு அரசு சில தளர்வுகளை வழங்கிட நடவடிக்கை எடுத்துள்ளது.

1. உள்ளூர் காளைகள் பங்குபெறுவதையும், உள்ளூர் வீரர்கள் பங்குபெறுவதையும் உறுதி செய்திட ஏதுவாக, ஆன்-லைன் பதிவு முறையினை மாற்றி, அந்தந்த மாவட்ட அளவில் முடிவு செய்துகொள்ள வழிவகை செய்யப்படும்.

2. போட்டிகளின் போது இறக்க நேரிடும் மாடுபிடி வீரர்களுக்கு உரிய நிவாரணம் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. எனவே, மாடுபிடி வீரர்களுக்கு ஆயுள் காப்பீடு கட்டாயம் என்ற விதி தளர்த்தப்படும்.

3. இதுவரை ஜல்லிக்கட்டு போட்டி நடத்துபவர்களிடம் முத்திரைத் தாளில் பெறப்பட்டு வந்த உறுதிமொழிப் பத்திரம் என்ற நடைமுறை இரத்து செய்யப்படும்.

4. தமிழ்நாட்டின் பாரம்பரியத்தைக் காப்பதிலும், ஜல்லிக்கட்டு விளையாட்டினைத் தொடர்ந்து ஊக்குவித்திடவும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு தொடர்ந்து செயல்படும்.

இந்த மாற்றம் ஏன்?

ஆன்லைன் பதிவு மூலம் உள்ளூர் காளைகளும், வீரர்களும் ஜல்லிக்கட்டுப்போட்டியில் பங்குபெறுவதில் பெரும் சிக்கல் உருவானது. இதனை மாற்ற வேண்டும் என ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். தமிழ்நாட்டின் சில இடங்களில் இதுதொடர்பாக போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து அரசு இந்த விதிமுறை குறித்து பரிசீலித்து இப்போது இந்த முடிவை எடுத்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி நடத்துபவர்களிடம் முத்திரைத் தாளில் பெறப்பட்டு வந்த உறுதிமொழிப் பத்திரம் என்ற நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும், ஜல்லிக்கட்டு விளையாட்டு வீர ர்களுக்கான ஆயுள்  காப்பீடு கட்டாயம் என்ற வதிமுறையும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தமிழ்நாடு அரசுப் பணி! தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை - முக்கிய தகவல்

மேலும் படிக்க | ரேஷன் கார்டு முக்கிய அறிவிப்பு! சர்க்கரை கார்டை அரிசி கார்டாக மாற்றலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News