ரேஷன் கார்டு : மக்களுக்கு 2 குட்நியூஸ் கொடுத்த தமிழ்நாடு அரசு! இனி அந்த தப்பு நடக்காது

Ration Card : ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு இரண்டு நாட்களில் இரண்டு குட்நியூஸ்களை வெளியிட்டுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே பார்க்கலாம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 26, 2025, 08:24 AM IST
  • ரேஷன் கார்டு லேட்டஸ்ட் அப்டேட்டுகள்
  • தமிழ்நாடு அரசின் 2 முக்கிய அறிவிப்புகள்
  • 29ம் தேதி ரேஷன் கடை வழக்கம்போல் இயங்கும்
ரேஷன் கார்டு : மக்களுக்கு 2 குட்நியூஸ் கொடுத்த தமிழ்நாடு அரசு! இனி அந்த தப்பு நடக்காது

ரேஷன் கார்டு மூலம் ஏழை எளிய மக்களுக்கு தமிழ்நாடு அரசு மலிவு விலையில் மளிகை பொருட்களை விநியோகித்து வரும் நிலையில், அதில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்ய பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் காலம்காலமாக இருக்கும் ஒரு பிரச்சனை என்னவென்றால், மக்களுக்கு கொடுக்கப்படும் அரிசி, பருப்பு, கோதுமை ஆகியவற்றில் மோசடிகள் நடப்பதாக தொடர்ச்சியான புகார்கள் பெறப்பட்டு வருகின்றன. இதனை தடுக்க தீவிரமாக ஆலோசனை செய்த தமிழ்நாடு அரசு, பொருட்கள் எடை அளவு, மக்களுக்கு கொடுக்கப்படும் கம்ப்யூட்டர் பில்லில் இடம்பெறும் வகையில் மெஷின்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி இது குறித்து சென்னையில் ஆய்வு மேற்கொண்டார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி சென்னை மண்டலத்தில் கீழ்ப்பாக்கம். ஃபிளவர்ஸ் சாலை, அமுதம் நியாயவிலை அங்காடியில் 24.03.2025 அன்று மாலையில் விற்பனை முனைய இயந்திரத்துடன் எடைத் தராசை இணைத்தல் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டார். விற்பனை முனைய இயந்திரத்தில் கைரேகைப் பதிவு, எடைத்தராசில் பொருளை எடைபோட்டு விற்பனை முனைய இயத்திரத்துடன் இணைத்து ரசீது போடுதல், போன்றவற்றைப் பற்றிக் கடை விற்பனையாளரிடமும் பொதுமக்களிடமும் கருத்துகளைக் கேட்டறிந்தார்.

மேலும், ஆய்வின் போது பொதுமக்களிடம் நேரடியாகப் பேசி நியாய விலைக் கடையில் வழங்கப்படும் இன்றியமையாப் பொருட்களின் அளவு மற்றும் தரம் குறித்தும் கருத்துக்களைக் கேட்டறிந்தார் என தெரிவித்துள்ளது. அதாவது சோதனை முறையில் இந்தக்கடைகளில் எடைத்தராசுடன் பில் மெஷின் இணைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த சோதனைகளின் முடிவில் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு எடைத்தராசுடன் பில்மெஷின் இணைக்கும் இயந்திரங்களை கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இன்னொரு குட்நியூஸ் என்னவென்றால் வரும் 29 ஆம் தேதி ரேஷன் கடைகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், " குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி வருகின்ற 29.03.2025 அன்று அனைத்து நியாய விலைக் கடைகளும் வழக்கம் போல் செயல்படும். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி, அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக மாதத்தின் கடைசிப் பணி நாளன்று ஒத்திசைவுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுவதில்லை. 

இம்மாதத்தின் கடைசிப் பணிநாளான 29.03.2025 அன்று சனிக்கிழமையாக அமைகிறது. மேலும், அதனைத் தொடர்ந்து வரும் 30.03.2025 அன்று தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் 31.03.2025 அன்று ரம்ஜான் பண்டிகையினை முன்னிட்டு அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் விடுமுறை நாட்களாகும். எனவே, இம்மாதத்தின் கடைசி இரண்டு நாட்கள் நியாய விலைக் கடைகளுக்குப் பொது விடுமுறை தினங்களாக வருவதால், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி வருகின்ற 29.03.2025 அன்று அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்பட்டு, வழக்கம் போல் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை 29.03.2025 அன்றும் நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ரேஷன் கார்டு : அரசு வெளியிட்டிருக்கும் 2 முக்கிய அறிவுறுத்தல்கள்

மேலும் படிக்க | மனோஜ் பாரதிராஜா மறைவு.. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

மேலும் படிக்க | புதிய ரேஷன் கார்டு : எப்படி விண்ணப்பிப்பது? லேட்டஸ்ட் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News