Tamil Nadu Government Latest Announcement : தமிழ்நாடு அரசு இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெயிட்டுள்ளது. இந்த இரண்டு அறிவிப்புகளும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ஆகும். முதலாவது செய்தி என்னவென்றால், நீர் நிலைகளில் இருக்கும் வண்டல் மண், களிமண் ஆகியவற்றை விவசாயிகள் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம். அதேபோல், விவசாயிகள் அடையாள எண்ணுக்கு மார்ச் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த இரண்டு முக்கிய அறிவிப்புகளின் முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
1. விவசாயிகள் அடையாள எண் விண்ணப்பித்தல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு அடையாள அட்டைஎண் வழங்கும் திட்டத்தில், மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து விவசாயிகளுக்கும் ஆதார்எண் போன்ற தனித்துவமான விவசாய அடையாளஎண் வழங்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் ஒன்றிய மற்றும் மாநில அரசின் அனைத்து மானியங்களும் இந்த விவசாய அடையாள எண்ணின் அடிப்படையிலேயே வழங்கப்படும். மேலும், பி.எம்.கிசான் திட்டத்தில் அடுத்த தவணை பெற விவசாயிகள் இந்த அடையாளஎண் பெறுவது அவசியம் ஆகும்.
இந்த அடையாளஎண்கள் வழங்கும் முகாம்கள் 10.02.2025 முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் சகதுறை அலுவலர்களால் நடத்தப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமுள்ள 59,317 விவசாயிகளில் இதுவரை 30.866 விவசாயிகளுக்கு இந்த முகாம்கள் மூலம் அடையாளஎண்கள் வழங்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது சேவை மையங்கள் வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் கிராமபஞ்சாயத்து அலுவலகங்களில் இலவசமாக விவசாயிகளின் விவரங்கள் பதிவுசெய்ய்ப்பட்டு அடையாளஎண் வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் அனைவரும் அருகில் உள்ள பொதுசேவை (CSC) மையங்களை அணுக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதுவரை அடையாளஎண்கள் பெறாத மீதமுள்ள 28.501 விவசாயிகள் தங்களுடைய ஆதார்நகல். நில ஆவணநகல்கள் மற்றும் ஆதார்எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன்எண் ஆகியவற்றுடன் சென்று பதிவுசெய்து கொள்ள வேண்டும். இந்தபதிவு மேற்கொள்ள கடைசி நாள் 31.03.2025 ஆகும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் இலவசமாக மண் எடுக்க அனுமதி
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் வண்டல்மண். களிமண் ஆகியவற்றை இலவசமாக எடுத்து செல்வதற்காக 2024 நவம்பர் மாதம் வரை நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 336 ஏரிகளிலும், ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 305 ஏரிகள் மொத்தம் 641 எரிகளில் வண்டல் மண்/ களிமண் எடுக்க விண்ணப்பங்கள்கோரி மாவட்ட அரசிதழ் பிரசுரம் செய்யப்பட்டிருந்தது.
தற்போது கூடுதலாக நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டிலுள்ள 209 ஏரிகளும், ஊரக வளர்ச்சித்துறை 276 ஏரிகளும் என 485 ஏரிகளை செங்கல்பட்டு மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.8, நாள்:27.02.2025 மற்றும் சிறப்பு வெளியீடு எண்.9, நாள்:18.03.2025ன்படி வெளியிடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 1126 ஏரிகளின் விவரங்களை செங்கல்பட்டு மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறு கனிம சதுகை விதிகள் 1959 -இன் விதி எண் 12(2) (a) மற்றும் (b)-இன் கீழ் கட்டணமில்லாமல் விவசாய மேம்பாட்டிற்காக மனு செய்வதற்கான நிபந்தனைகள் மனுதாரரின் வசிப்பிடம் அல்லது வேளாண் நிலம் அமைந்துள்ள கிராமம் மற்றும் வண்டல்மண் /களிமண் தூர்வாரி எடுத்துச் செல்லப்பட வேண்டிய கண்மாய் /ஏரி /குளம் அமைந்துள்ள கிராமம் ஆகியவை அதே வருவாய் கிராமம் அல்லது அதற்கு அருகிலுள்ள வருவாய் கிராமத்தின் எல்லை வரம்பிற்குள் அமைந்திருக்க வேண்டும்.
விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண்ணை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் நபர் விவசாய நிலம் வைத்துள்ளவராக இருக்க வேண்டும் அல்லது குத்தகை பதிவேட்டின் பதிவு செய்யப்பட்டு குத்தகைதாராக இருக்க வேண்டும். மேலும் மண்பாண்ட தொழிலாளராக இருப்பின் சம்மந்தப்பட்ட கிராமநிர்வாக அலுவலர் அதனை உறுதி செய்ய வேண்டும். மேற்குறிப்பிட்ட தகவல்களுடன் தங்களது விண்ணப்பத்தினை tnesevai.tn.gov.in(Online website) என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மற்றும் உதவி இயக்குநர். புவியியல் மற்றும் சுரங்கத்துறை செங்கல்பட்டு ஆகியோரை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | அதிர்ச்சி செய்தி...! எல்பிஜி சிலிண்டருக்கு தட்டுப்பாடு வரலாம்... என்ன காரணம்?
மேலும் படிக்க | அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் வாங்கியிருக்கிறீர்களா? தமிழ்நாடு அரசு குட்நியூஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









