)
Tamil Nadu Government : சொந்த தொழில் செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சுயதொழில் பயிற்சி வழங்கி வருகிறது. இந்த பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் தொழில் கடன் திட்டங்கள் குறித்தும், அதற்கு எப்படி விண்ணப்பிப்பது குறித்தும் கூடுதலாக வழிகாட்டப்படுகிறது. எனவே, வீட்டில் இருந்து சொந்த தொழில் செய்ய நினைக்கும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த அறிவிப்புகள் குறித்து இங்கே விளக்கமாக தெரிந்து கொள்ளுங்கள்.
மூலிகை சோப்பு பொருட்கள் (பயோ-என்சைம்) தயாரித்தல் தொடர்பான பயிற்சி
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், மூலிகை சோப்பு பொருட்கள் (பயோ-என்சைம்) தயாரித்தல் தொடர்பான பயிற்சி 14.06.2025 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் தேங்காய் எண்ணெய் சோப்பு, மூலிகை சோப்பு, ஆயுர்வேத சோப்பு, முடி வளரும் எண்ணெய், முடி வளரும் ஷாம்பு, பயோ-என்சைம் ஷாம்பு ஃபேஸ் வாஷ் ஜெல், முடி சீரம் திரவம் மற்றும் பயிற்சி வழிமுறைகளுடன் சுயமாக தொழில் தொடங்குவதற்கு இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இப்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம். சென்னையில் பங்குபெறும் ஆண், பெண் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள் - தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600032. 8668102600. முன்பதிவு அவசியம். அரசு சான்றிதழ் வழங்கப்படும்
மூன்று நாள் பூஜை பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூன்று நாள் பூஜை பொருட்கள் தயாரிப்பு பயிற்சி வரும் 10.06.2025 முதல் 12.06.2025 வரை காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் இடம்: EDII-TN வளாகம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை - 600 032.இந்த முயற்சி, பாரம்பரிய மற்றும் அதிக தேவை உள்ள பூஜை பொருட்களை உற்பத்தி செய்ய தேவையான திறன்களும் அறிவும் கொண்ட தொழில்முனைவோர்கள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்களை ஊக்கப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.
நீங்கள் கற்றுக்கொள்ளப்போவது - தயாரிப்பு பட்டியல்:
* அகர்பத்திகள் - 3 இல் 1
* அகர்பத்திகள் - 5 இல் 1
* மூலிகை அகர்பத்திகள்
* சாம்பிராணி
* கம்ப்யூட்டர் சாம்பிராணி
* குங்கிலியம் சாம்பிராணி
* கற்பூரம் தயாரிப்பு
* ரோஸ் வாட்டர் தயாரிப்பு
* பூஜை எண்ணெய் தயாரிப்பு
* மூலிகை மெழுகுவர்த்திகள்
* ஓமம் வாட்டர் தயாரிப்பு
* வினிகர் தயாரிப்பு
* சந்தனம் தயாரிப்பு.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது: 9543773337 / 9360221280, இடம்: EDII-TN வளாகம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை-600032. முன்பதிவு அவசியம். அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ