அனகாபுத்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது ஏன்? எதிர்ப்புக்கு தமிழக அரசின் பதில் இதுதான்!

Anakaputhur Encroachment: அனகாபுத்தூரில் அடையார் ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அதுகுறித்து தமிழ்நாடு அரசு அளித்த விரிவான விளக்கத்தை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : May 21, 2025, 05:05 PM IST
  • அடையார் ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன.
  • இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
  • அடையாறு நதியை முழுவதுமாக புனரமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
அனகாபுத்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது ஏன்? எதிர்ப்புக்கு தமிழக அரசின் பதில் இதுதான்!

Demolition Of Anakaputhur Encroachment: சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் அடையார் ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று முதல் நடைபெற்றது வருகிறது. அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக கூறப்படும் பொதுமக்களின் குடியிருப்புகளும் அகற்றப்படுகின்றன. மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பலத்த போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெறுகின்றன. 

Anakaputhur Encroachment: கடும் எதிர்ப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட பல்வேறு அமைப்பினர் அனகாபுத்தூரில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் இந்த வீடுகளை அகற்றும் பணிகளை கைவிடுமாறு வலியுறுத்தி வருகின்றனர். இதனை மக்கள் விரோத செயல்பாடு என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Anakaputhur Encroachment: அடையாறு நதியை சீரமைக்க...

இந்த சூழலில், அனகாபுத்தூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் குறித்து தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இன்று (மே 21) மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், "அடையாறு நதியை சீரமைக்க தமிழ்நாடு அரசின் புதிய நிறுவனமான சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனம் (CRTCL) மூலம் ரூ. 1500 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ள தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தினை செயல்படுத்த நடப்பாண்டில் தமிழ்நாடு அரசு ரூ. 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடையாறு நதியை முழுவதுமாக புனரமைத்து கரையோரம் உள்ள பகுதிகளில் கழிவுநீர் கலப்பதை அறவே தடுத்து, நீர்வாழ் உயிரினங்கள் வாழும் சிறந்த சூழலை உருவாக்க வேண்டும் என்றால், கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும் அதன் மூலம் மாசுபடுவதை தடுக்கவும் கரையோரம் உள்ள குடியிருப்புகளை மறுகுடியமர்வு செய்வது அவசியமாகும்.

Anakaputhur Encroachment: 593 குடும்பங்களுக்கு இலவச வீடுகள்

இதன் ஒரு பகுதியாக அனகாபுத்துரில் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள காயிதே மில்லத் நகர், தாய் மூகாம்பிகை நகர், சாந்தி நகர், எம்ஜிஆர் நகர் 3வது தெரு ஆகிய இடங்களில் வசித்து வரும் 593 குடும்பங்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் தைலாவரம், கீரப்பாக்கம், பெரும்பாக்கம் மற்றும் நாவலுர் ஆகிய இடங்களில் 390 சதுர அடியில் இலவசமாக வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்பட உள்ளன" என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த ஒரு வீட்டின் மதிப்பு ரூ.17 லட்சம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், "அடையாறு ஆற்றங்கரையில் உள்ள ஜோதி ராமலிங்கம் நகர், திடீர் நகர், ஜோதி அம்மாள் நகர், சூர்யா நகர், மல்லிகைப்பூ நகர் ஆகிய 5 இடங்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு 390 சதுர அடி பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகள் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக சுமார் ரூபாய் 17 லட்சம் மதிப்பிலான வீடுகள் கட்டப்பட்டு இலவசமாக வழங்கப்பட உள்ளன.

Anakaputhur Encroachment: இடமாற்றம் செய்வோருக்கு வழங்கப்படும் சலுகைகள்

மேலும், பயனாளிகளுக்கு குடும்பம் ஒன்றுக்கு இடமாற்றுப்படியாக ஒருமுறை ரூ. 5 ஆயிரம், வாழ்வாதார உதவிக்காக மாதம் ரூ. 2 ஆயிரத்து 500 என்ற அடிப்படையில் ஒரு வருடத்திற்கு ரூ. 30 ஆயிரம், மின்சார இணைப்பு கட்டணம் ரூ. 2 ஆயிரத்து 500 என்ற அடிப்படையிலும் ஒவ்வொரு குடியமர்விற்கும் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக விரிவான சமுதாய வளர்ச்சி திட்டங்கள், உடனடி குடும்ப அட்டை மாற்றம் செய்தல், விதவை, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடி சமூக பாதுகாப்பு திட்ட உதவி மாற்றம் செய்தல், கல்வி, அங்கன்வாடி, தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலை பள்ளி சேர்க்கை போன்ற அனைத்து திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

Anakaputhur Encroachment: உயர்நீதிமன்ற உத்தரவுபடி தான்...

மேலும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி ஆற்றங்கரையில் வசித்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள் மறு குடியமர்வு செய்யப்பட்டு வருகின்றனர். மறு குடியமர்விற்கு ஒப்புதல் தராத ஆக்கரமிப்பாளர்களை உடனடியாக அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நதி நீர்சீரமைப்பு திட்டம் என்பதாலும், மழைக்கால வெள்ளத்தடுப்பு காரணங்களுக்காகவும் ஆற்றங்கரையில் வசிக்கும் ஆக்கரமிப்பாளர்களை அரசு உரிய உதவிகளுடன் மறு குடியமர்வு செய்து வரும் அரசின் இந்த செயலுக்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | சென்னையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! கலந்து கொண்ட முக்கிய சங்கங்கள்!

மேலும் படிக்க | தமிழக அரசின் நெக்ஸ்ட் ஜாக்பாட்... சென்னையில் கம்மி வாடகைக்கு பெண்களுக்கு ரூம்!

மேலும் படிக்க | தமிழ் சினிமாவை ஸ்டாலின் குடும்பம் மிரட்டி வருகிறது - அதிமுக முன்னாள் அமைச்சர் கடும் தாக்கு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News