TN government electricity news : தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது. ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தினசரி 100 டிகிரியை கடந்து வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் வீடுகளில் மின் உபயோகமும் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் மின் உபயோகம் அதிகரித்திருப்பதால் இதனை சரி செய்வது குறித்து ஆலோசனை நடத்திய மின்வாரியம், துறை சார்ந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து பகுதிகளிலும் தடையற்ற மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக இப்போது 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அனைத்து பகுதிகளிலும தடையற்ற மின்சாரம் வழங்குவதை அந்தந்த பகுதிகளில் இருக்கும் மின்வாரியத்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அவசர கால பணிகளுக்கு ஏற்ப ஊழியர்களையும், உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறும் மின் தொடரமைப்புக் கழக இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அண்மையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி மின்சாரத்துறை சார்ந்த நடவடிக்கைகளில் எந்தவித சுணக்கமும் இருக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், மின்தட்டுப்பாடு, அதற்கு ஏற்ப உற்பத்தியை அதிகரிப்பது, மேலும் கூடுதல் மின்சார தேவையை எப்படி பூர்த்தி செய்வது, அதற்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஆலோசனை நடத்தினார். அத்துடன் உரிய முன்னேற்பாடுகள் செய்து எந்த பிரச்சனைகளும் தலைதூக்காமல் இருக்கும் வகையில்பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
மின்சாரத்துறையின் இந்த உத்தரவின் காரணமாக தமிழகம் முழுவதும் பொதுத்தேர்வு முடியும் வரை மின் தடை இருக்காது என்பது உறுதியாகியுள்ளது. எனவே, மக்களும் மின்தடை இருக்கும் என்ற பயம் தேவையில்லை. அதேபோல் கோடை காலம் தொடங்கிவிட்டதால் மின்சார கட்டணம் அதிகரிக்கும் என்பதால் அதனை குறைப்பது எப்படி என்பது குறித்து மக்கள் சிந்தனை செய்வது அவசியம். தேவையானபோது மட்டுமே மின்விசிறிகளை இயக்க வேண்டும். தேவையில்லை என தெரிந்தவுடன் அதனை ஆஃப் செய்துவிட வேண்டும். மின் விளக்குகள் தேவையில்லாமல் எரிவதையும் பார்த்து சரி செய்து கொள்ள வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









