)
தமிழ்நாடு செய்திகள்: கைவிரல் ரேகை பதியாத குடும்ப அட்டைகள் செல்லாது என்று சமூக வலை தளங்களில் பரவும் தகவல் வெறும் வதந்தி என்று தமிழக அரசு விளக்கம் அவித்துள்ளது. குடும்ப அட்டை குறித்து பரவிய தகவல் என்ன? ஏன் தமிழக அரசு விளக்கம் அளித்தது? குடும்ப அட்டை கைவிரல் ரேகை பதிவு குறித்து பார்ப்போம்.
குடும்ப அட்டைதாரர்கள் தங்களின் குடும்ப அட்டைக்கு உரிய பொருட்கள் முழு எடையும் பெறும் வகையில், நியாய விலைக் கடை எடை இயந்திரத்துடன் விற்பனை முனைய இயந்திரத்தினை இணைத்து பட்டியலிடும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் விற்பனை முனைய இயந்திரத்தில் விரல் ரேகை மூலம் ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். கைரேகை பதிவு செய்யாதவர்கள் மத்திய அரசால் வழங்கப்படும் மானிய பொருட்கள் பெற இயலாது.
எனவே. ஜூன் 30 ஆம் தேதிக்குள் அந்தந்த நியாய விலைக் கடைகளை அணுகி விரல் ரேகை அல்லது கருவிழி மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
வீட்டில் முதியவர்கள், நோயாளிகள் இருந்தால் விற்பனையாளருக்கு தகவல் அளித்தால், அவர்கள் நேரடியாய வீட்டிற்கு வந்து விரல் ரேகை மற்றும் கருவிழியை பதிவு கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் விரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் குடும்ப அட்டைகள் செல்லாததாக மாறிவிடும் எனவும் கூறப்பட்டு இருந்தது.
இந்தநிலையில், குடும்ப அட்டைகள் செல்லாது? எனப் பரப்பப்படும் தகவல்கள் உண்மையில்லை என்று தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
ஜூன்.30க்குள் கை விரல் ரேகை பதியாத ரேஷன் அட்டைகள் செல்லாது என்று வதந்தி !@CMOTamilnadu @TNDIPRNEWS pic.twitter.com/928V2EqjC8
— TN Fact Check (@tn_factcheck) July 4, 2025
தமிழகத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கை விரல் ரேகையை பதிவு செய்வது அவசியம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கடைசி தேதி இன்னமும் வரையறுக்கப்படவில்லை. எனவே, சமூக ஊடகங்கள் மூலம் வரும் செய்தி உண்மை இல்லை என தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் கொடுத்து உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ