Tamil Nadu Government Fact Check: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று (அக். 14) தொடங்கியது. கரூர் கூட்டநெரிசல் விவகாரம் அரசியல் களத்தில் தீவிரம்காட்டி வரும் வேளையில், இந்த கூட்டத்தொடர் வரும் வெள்ளிக்கிழமை (அக். 17) வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று உயிரிழந்த வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்கள் உள்ளிட்ட பலருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு, இரங்கல் தீர்மானம் நிறைவட்டப்பட்டதை அடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. இரண்டாவது நாளாக இன்று காலை 9.30 மணிக்கு பேரவை கூடியது.
TN Assembly: சட்டப்பேரவையில் இன்று பரபரப்பு
காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை கேள்வி - பதில் நேரம் கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, கரூர் கூட்டநெரிசல் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் அவையில் காரசார விவாதங்களை நடத்தினர். பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் தொடர்ந்து பேரவையில் உரையாற்றினர்.
தொடர்ந்து, 1951ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வளங்கள் சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட முன்வடிவை பேரவையில் அவை முன்னவர் துரைமுருகன் தாக்கல் செய்தார். அதுமட்டுமின்றி, மாணவர் சமுதாயத்தை நலனை கருத்தில் கொண்டும், மாநிலத்தின் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கிலும் தனியார் பல்கலைக்கழகங்களை தொடங்க விதிக்கப்பட்ட கொள்கை நெறிமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில் சட்டமசோதா பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Tamil Nadu Government: இந்தி மொழிக்கு முற்றிலும் தடையா?
நாளை மூன்றாவது நாள் கூட்டம் நடைபெறும். இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதாவது, தமிழ்நாடு முழுவதும் இந்தி விளம்பரப் பலகைகள் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களைத் தடை செய்வதற்கான மசோதாவை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்த பல வட இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
TN Fact Check: முற்றிலும் வதந்தி
இது பெரும் பரபரப்பை உண்டாக்கிய நிலையில், தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் இந்த தகவலை முற்றிலும் மறுத்து, இதை வதந்தி என்றும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து @tn_factcheck என்ற தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகத்தின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில், "தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் ஆக உள்ளதாகப் பரவும் வதந்தி" என தெரிவித்துள்ளது.
Rumor about Hindi language ban bill in Tamil Nadu Assembly
Fake News:
It is being claimed that the Tamil Nadu government, led by the Honorable Chief Minister, is planning to introduce a bill in the Legislative Assembly to ban the Hindi language in all forms.
Truth:
This claim…
— TN Fact Check (@tn_factcheck) October 15, 2025
மேலும், தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் பேரவையில் தாக்கல் செய்ய இருப்பதாக செய்திகளில் வெளியாகி வருகிறது என்றும் இது முற்றிலும் வதந்தியே என்றும் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளது. மேலும், அப்படி எந்தவொரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை என்று சட்டப்பேரவை செயலர் தெரிவித்துள்ளார் என்றும் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் உறுதிப்படுத்தியிருக்கிறது. இதனால் வதந்திகளை பரப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | அதிமுக கூட்டம் கட்டுக்கோப்புடன் நடந்தது நேர் மாறாக தவெக கட்சி நிகழ்ச்சி இருந்தது!
மேலும் படிக்க | கரூர் சம்பவம்: அமைச்சர் சொன்ன ஒரே வார்த்தை - டென்ஷன் ஆன இபிஎஸ் - அதிமுக அமளி ஏன்?
மேலும் படிக்க | விஜய்யின் செயல்தான் கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணம்.. சட்டசபையில் அமைச்சர் எ.வ. வேலு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









