நீட் விலக்கு மசோதா: ஜனாதிபதியை எதிர்த்து... உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

NEET Exemption Bill: நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதை எதிர்த்து குடியரசுத் தலைவர் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Nov 16, 2025, 07:55 AM IST
நீட் விலக்கு மசோதா: ஜனாதிபதியை எதிர்த்து... உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

Tamil Nadu Government, NEET Exemption Bill: தமிழ்நாட்டில் நீட் தேர்வின் அடிப்படையில் இளங்கலை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான மாணவச் சேர்க்கை நடத்தப்படுவதற்கு பதில், 12ஆம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை மசோதாவை (2021) நிறைவேற்றியது. 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் முறையும், 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாவது முறையும் ஒருமனதாக நிறைவேறியது.

Add Zee News as a Preferred Source

இந்த தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை மசோதா, 2021 ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மறுத்துள்ளார். இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மசோதா மீது முடிவெடுக்க 1400 நாட்களுக்கு மேல் குடியரசுத் தலைவர் தாமதம் செய்து இருக்கிறார் என்றும் நீட் விலக்கு மசோதாவை நிராகரிப்பதற்கான காரணத்தையும் கூறவில்லை என்றும் தமிழ்நாடு அரசு மனுவில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு அதன் மனுவில், குடியரசு தலைவரின் இந்த முடிவு அரசியலமைப்புக்கு விரோதமானது மற்றும் தன்னிச்சையானது என்று குறிப்பிட்டுள்ளது. எந்த காரணமும் இல்லாமல் ஒப்புதலை நிறுத்தி வைப்பது என்பது அரசியலமைப்பின் 201 மற்றும் 254(2) பிரிவுகளை மீறுகிறது என குறிப்பிட்டுள்ளார். இது கடுமையான அரசியலமைப்புக்கு எதிரான முட்டுக்கட்டையை உருவாக்கியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஏற்கனவே விரிவான விளக்கங்களை சமர்ப்பித்த போதிலும், குடியரசு தலைவரின் மறுப்பு தெரிவிப்பது மத்திய அரசின் ஆலோசனையின் அடிப்படையில் எந்திரத்தனமாக இருப்பதாக தமிழக அரசு அந்த மனுவில் தெரிவித்துள்ளது. இத்தகைய நடவடிக்கை, நாட்டின் கூட்டாட்சி சமநிலையை சிதைக்கிறது என்றும் அரசியலமைப்பு 201 பிரிவை பயனற்றதாக மாற்றுகிறது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், மாநிலப் பட்டியலில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட விஷயங்களில் மாநில அரசின் சட்டம் இயற்றும் சுயாட்சியை முடக்கும் விதமாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.

தற்போது நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் இருப்பது, இதுபோன்ற முந்தைய முடிவுகளுக்கு முரணானது மற்றும் அரசியலமைப்பு நிலைத்தன்மையை சிதைக்கிறது என்றும் தமிழ்நாடு அரசு வாதிட்டுள்ளது. மத்திய சட்டத்துடன் முரண்படும் மாநில சட்டங்களுக்கு ஜனாதிபதிகள் ஒப்புதல் அளித்த பிற நிகழ்வுகளும் தமிழ்நாடு அரசின் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு சட்டம் மற்றும் பல மாநிலங்களில் தொழிலாளர் சட்ட திருத்தங்கள் உட்பட அனைத்தையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

நீட் விலக்கு மசோதா விவகாரத்தில், குடியரசுத் தலைவர் ஒப்புதலை நிறுத்தி வைத்ததை அரசியலமைப்பிற்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் என்றும் இந்த மசோதா அரசியலமைப்பு 254(2) பிரிவின் கீழ் ஒப்புதல் பெற்றதாகக் கருதவும் உச்ச நீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு நாடியுள்ளது. அதுமட்டுமின்றி, புதிய பரிசீலனைக்காக நீட் விலக்கு மசோதாவை மீண்டும் குடியரசு தலைவரிடம் சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கோரியுள்ளது. 

தமிழ்நாட்டைப் பொருத்தவரை, பாஜகவை தவிர பிற அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் விலக்குக்கு ஆதரவு மனப்பான்மையில் உள்ளன. நீட் தேர்வு அதிக பணம் படைத்தவர்களுக்கும், பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வாய்ப்புள்ளவர்களுக்கும் மட்டுமே பயனளிக்கிறது என்றும் அரசு பள்ளி மாணவர்கள் உள்பட சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் மாணவர்களுக்கு எதிராக இருப்பதாக எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். மக்களிடம் இருந்து பெறப்பட்ட 80,000க்கும் மேற்பட்ட கருத்துக்களின் அடிப்படையாகக் கொண்ட நீதிபதி ஏ.கே. ராஜன் குழு, நீட் தேர்வு என்பது கட்டமைப்பு ரீதியாக பின்தங்கிய குழுக்களை விலக்கி, பயிற்சி வகுப்புகளில் அடுத்தடுத்து தேர்வை எழுதி தேர்ச்சியடைபவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்றும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சென்னை சென்ட்ரலில் மிக பிரம்மாண்ட ப்ராஜெக்ட்... விவரம் என்ன பார்க்கலாம்?

மேலும் படிக்க | "உங்கள் வாக்குரிமை பறிபோகலாம்!" - விஜய் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

மேலும் படிக்க | கல்லூரி மாணவரா நீங்கள்? மாதம் ரூ.25,000 உதவித்தொகை கிடைக்கும்! எப்படி விண்ணப்பிப்பது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News