10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்த குட்நியூஸ்..! வாய்ப்பை நழுவ விடாதீர்கள்..!

TamilNadu Government : 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசே பேக்கரி தொழில் மற்றும் திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி கொடுக்கிறது. இந்த பயிற்சி மூலம் தொழில்முனைவோர் ஆகலாம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 21, 2025, 07:38 AM IST
  • தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்
  • 10வது முடிச்சிருக்கீங்களா?
  • பேக்கரி, திருமண வீடியோ தொழில் பயிற்சி
10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்த குட்நியூஸ்..! வாய்ப்பை நழுவ விடாதீர்கள்..!

TamilNadu Government Free Training : தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 3 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் 26.03.2025 முதல் 28.03.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் பேக்கரி பொருட்களின் மூலப்பொருள், பிராண்ட் போன்றவற்றின் கிடைக்கும் தண்மை, கருவிகள் மற்றும் உபகரணங்களின் உள்ளீடுகள், இயந்திரங்கள் முதலியன, ஹைதராபாத் கராச்சி பிஸ்கட், ஜெர்ரா உப்பு பிஸ்கட், இனிப்பு குக்கீகள், ஈஸ்ட் புளிக்கவைக்கப்பட்ட பாம்பே பன், இனிப்பு ரொட்டி, கிரீம் பண், பழ ரஸ்க், பப்ஸ் வகைகள் கேக் வகைகள் எப்படி தயாரிப்பது பற்றி இப்பயிற்சியில் விளக்குவார்கள். 

மேலும் தயாரிப்பு சந்தைப்படுத்துதலின் அம்சங்கள் பேக்கிங் லேபிளிங் மற்றும் அதற்காண விலை வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும். இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்.
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சிட்கோ தொழிற்பேட்டை இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600 032. 8668108141/8668102600. முன்பதிவு அவசியம். அரசு சான்றிதழ் வழங்கப்படும். 

திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி

திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் என்ற இன்னொரு தொழில் பயிற்சியையும் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படுகிறது. சென்னையில். 10 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி வரும் 25.03.2025 முதல் 04.04.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. 

இப்பயிற்சியில் திருமண புகைப்படம் எடுத்தல் என்றால் என்ன. புகைப்படம் எடுத்தல் பற்றிய வரலாறு, புகைப்படத்தின் அடிப்படைகள், ஒளியமைப்பு, கலவை மற்றும் மேம்பட்ட புகைப்பட நுட்பங்கள் கவனம் செலுத்தும் முறைகள், திருமண புகைப்படம் எடுத்தல் என்றால் என்ன, பாரம்பரிய புகைப்படம் எடுத்தல் மேம்பட்ட நுட்பங்கள், நேர்மையான புகைப்படம் எடுத்தல் மேம்பட்ட நுட்பங்கள், திருமண உருவப்படங்கள் மேம்பட்ட நுட்பங்கள். உங்கள் குழுவை உருவாக்குதல் மற்றும் நிர்வகித்தல், உயர்நிலை புகைப்பட மறுசீரமைப்பு, ஆல்பம் வடிவமைப்பு, திருமண புகைப்படக் கலைஞர் மற்றும் திருமணமாக எப்படி சம்பாதிப்பது புகைப்பட வணிகம், திட்டங்கள் மற்றும் வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும். அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும்.

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை. இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல். சென்னை-600032 8668108141 / 8668102600. முன்பதிவு அவசியம், அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் படிக்க | சென்னையில் விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர பயண அட்டை பெறுவது எப்படி?

மேலும் படிக்க | இனி ரேஷன் கடைகளுக்கு போக தேவையில்லையா? வீடுகளுக்கே நேரடியாக வரும் பொருட்கள்?

மேலும் படிக்க | முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் ரூ.1 கோடி கடன் பெறலாம் - யாருக்கு கிடைக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News