மின்சார வாகனம் வாங்க... ரூ.20,000 கொடுக்கும் தமிழக அரசு - விண்ணப்பிப்பது எப்படி?

Tamil Nadu Government: இ-ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ.4 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெறுவது எப்படி, யாருக்காக இத்திட்டம் என்பதை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Aug 6, 2025, 07:04 PM IST
  • பட்ஜெட்டில் இத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியானது
  • 20 ஆயிரம் பேருக்கு இந்த மானியம் வழங்கப்படும்
  • ரூ. 4 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
மின்சார வாகனம் வாங்க... ரூ.20,000 கொடுக்கும் தமிழக அரசு - விண்ணப்பிப்பது எப்படி?

Tamil Nadu Government Subsidy For E-Scooter: தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், நான் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்புதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி போன்ற பல திட்டங்கள் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. தற்போது நலம் காக்கும் ஸ்டாலின் திட்டமும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Add Zee News as a Preferred Source

அந்த வகையில், இ-ஸ்கூட்டர் வாங்குவபவர்களுக்கு ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவித்திருந்தது. இந்த மானியம் யாருக்கு வழங்கப்படும், மானியத்தை பெறுவது எப்படி என்பதும் குறித்தும் இந்த திட்டத்தின் சமீபத்திய அப்டேட் குறித்தும் இங்கு காணலாம். 

Subsidy For E-Scooter: ரூ. 4 கோடி நிதி ஒதுக்கீடு

2025-2026 பட்ஜெட் உரையில், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியத்தில் பதிவுசெய்யப்பட்ட 2000 தொழிலாளர்களுக்கு புதிய மின்சார வாகனம் (e-scooter) வாங்குவதற்கு தலா 20 ஆயிரம் ரூபாய மானியம் வழங்கப்ப்டும் என அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த திட்டத்திற்கு ரூ.4 கோடி ஒதுக்கப்பபட்டுள்ளது.

Subsidy For E-Scooter: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது 

"தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நலவாரியம்" எனப்படும் இணையம் அடிப்படையிலான உடலுழைப்பு பணிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான புதிய நல வாரியத்தை நிறுவ உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதை தொடர்ந்து கடந்த மார்ச் 14ஆம் தேதி தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில், "இணைய அடிப்படையிலான சேவைகளில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வேகமாக வளர்ந்து வரும் இணைய அடிப்படையிலான பொருளாதாரத்தில், தொழிலாளர்களின் நலனை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு இணையம் அடிப்படையிலான கிக் தொழிலாளர் நல வாரியம் நிறுவப்பட்டுள்ளது.

Subsidy For E-Scooter: 20 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மானியம் 

நல வாரியத்தில் பதிவுசெய்யப்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை ஆதரிப்பதற்காக ஒரு புதிய திட்டம் தொடங்கப்படும். 2000 இணைய அடிப்படையிலான தொழிலாளர்கள் புதிய மின்சார வாகனம் (e-scooter) வாங்குவதற்கு தலா ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படும்" என அறிவித்தார். 

நிதி அமைச்சரின் இந்த அறிவிப்பின் அடிப்படையில், தொழிலாளர் இயக்குநர் தேவையான முன்மொழிவை அனுப்பியுள்ளார். அதில் இந்த நோக்கத்திற்கான மதிப்பிடப்பட்ட தொகை ரூ. 4 கோடி என தொடர்ச்சியான செலவினமாக இருப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு இதனை கவனமாக பரிசீலித்த பிறகு, தொழிலாளர் இயக்குநரின் முன்மொழிவை ஏற்றுக்கொண்டு, புதிய மின்சார வாகனம் (e-scooter) வாங்குவதற்கு பதிவுசெய்யப்பட்ட 2000 கிக் தொழிலாளர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் மானியம் வழங்குவதற்காக, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தொடர்ச்சியான செலவினமாக ரூ.4 கோடி நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்து என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

Subsidy For E-Scooter: உறுப்பினராவது எப்படி?

அதாவது, ஸ்விக்கி, சோமாட்டோ போன்ற செயலிகளில் டெலவரி ஊழியராக பணியாற்றுபவர்கள் இந்த நலவாரியத்தில் பதிவு செய்துகொள்வதன் மூலம் இ-ஸ்கூட்டர் வாங்குவதற்கு ரூ.20 ஆயிரம் மானியத்தை பெறலாம்.

தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நலவாரியத்தில் நீங்கள் இன்னும் உறுப்பினராக சேரவில்லை எனும்பட்சத்தில், https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் New Registration ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுடைய பணி விவரங்கள் மற்றும் இதர தகவல்களை உள்ளீடு உறுப்பினராக பதிவு செய்துகொள்ளலாம். .

Subsidy For E-Scooter: விண்ணப்பிப்பது எப்படி?

இந்த ரூ.20 ஆயிரம் மானியத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் தொழிலாளர்கள் https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் நலவாரிய பதிவு எண்ணை உள்ளீடு செய்து விண்ணபிக்கலாம்.

Subsidy For E-Scooter: தேவையான ஆணவங்கள்

தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், ஆதார் விவரம், முகவரி சான்று ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். இ-சேவை மையங்களுக்கு சென்றும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க | பழைய ஓய்வூதிய திட்டம்: செயல்படுத்தும் எண்ணம் துளியளவும் இல்லை.. அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

மேலும் படிக்க | பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன், உடனே விண்ணப்பிக்கவும் - தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : குட் நியூஸ் வந்தாச்சு! பெண்களே ரெடியா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News