விவசாயிகளுக்கு வெளியான மிகப்பெரிய குட்நியூஸ், காலவகாசம் நீட்டிப்பு - தவறவிடாதீங்க..!

Tamil Nadu Government : விவசாயிகள் நில உடைமை விவரங்களை பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 2, 2025, 07:13 AM IST
  • தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு
  • விவசாயிகளுக்கு ஒரு குட் நியூஸ்
  • நில உடமைகளை பதிவு செய்ய காலவகாசம் நீட்டிப்பு
விவசாயிகளுக்கு வெளியான மிகப்பெரிய குட்நியூஸ், காலவகாசம் நீட்டிப்பு - தவறவிடாதீங்க..!

Tamil Nadu Government Good News For Farmers : விவசாயிகள் நில உடைமை விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்து அரசு ஏற்கனவே விரிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், விவசாயிகள் நில உடைமை விவரங்களை பதிவு செய்ய வழங்கப்பட்ட காலக்கெடு மார்ச் 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், இப்போது  ஏப்ரல் 15-ஆம் தேதி வரை காலவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மொத்தம் 1,83,115 விவசாயிகள் உள்ளனர். இதுவரை 1,00,633 விவசாயிகள் பதிவு செய்து அடையாள எண் பெற்றுள்ளனர். பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் 1,03,206 விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். 

Add Zee News as a Preferred Source

இதுவரை 62,563 விவசாயிகள் பதிவு செய்து தனித்துவ அடையாள எண் பெற்றுள்ளனர். மீதம் உள்ள 40,643 விவசாயிகள் உடனடியாக பதிவு செய்து பி.எம்.கிஸான் திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தும் வேளாண்மை, தோட்டக்கலை. வேளாண் வணிகம், கால்நடைபராமரிப்பு, கூட்டுறவு, வருவாய் உள்ளிட்ட 24 துறைகளின் மானியத் திட்டங்களை எளிதில் பெறலாம். மேற்கண்ட துறைகளின் திட்ட பலன்களை பெறுவதற்கு ஒவ்வொரு முறையும் விண்ணப்பித்து ஆவணங்கள் சமர்பிக்க வேண்டிய அவசியமில்லை. 

விவசாயிகள் அவர்களின் சொந்த கிராமங்களில் வசிக்கும் பட்சத்தில் கிராம ஊராட்சி அலுவலகங்கள், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்கள், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் தோட்டக்கலை. உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் விவசாயிகளின் நில உடைமை விவரம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட விவசாயிகள் அவர்களின் சொந்த கிராமங்களை வீட்டு வேறு எந்தபகுதியில் இருந்தாலும் அருகில் உள்ள அனைத்து அரசு அங்கீகாரம் பெற்ற பொதுசேவை மையங்களில் தங்கள் நில உடைமைகளை இலவசமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளும் தங்கள் அருகில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பொதுசேவை மையத்தை பயன்படுத்தி தங்களுடைய பட்டா, கூட்டுபட்டா, ஆதார் அட்டை, அலைபேசி கொண்டு சென்று பதிவு செய்து இந்த அரியவாய்ப்பினை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் இச்செயலி மூலம் விவசாயிகளின் நில உடைமைகள் மற்றும் இதர விவரங்களை விவசாயிகள் முன்னிலையில் சரிபார்த்து விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு அடையாள எண் வழங்கப்படும். இவ்வாறு பதிவு செய்து பெறப்படும் தனித்துவ விவசாயி அடையாள எண் மூலம் இனிவரும் காலங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பயன்களை ஒற்றைசாளர முறையில் விவசாயிகள் பெறலாம். எனவே 15.04.2025 வரை கால நீட்டிப்பினை பயன்படுத்தி நில உடைமை விவரங்களை பதிவு செய்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. மற்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | ரேஷன் கார்டு விண்ணப்பம் : ஆன்லைன் vs ஆஃப்லைன் எதில் கார்டு சீக்கிரம் கிடைக்கும்?

மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அவசர அறிவிப்பு! 2 நாட்களில் இதை செய்யாவிட்டால் கார்டு செல்லாது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News