Tamil Nadu Government Update: சென்னை மாநகராட்சியின் மண்டலங்களின் எண்ணிக்கையை 15 லிருந்து 20 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது எந்தெந்த மண்டலங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன போன்ற விவரங்களை பார்ப்போம்.
தமிழக அரசு அரசாணை
தற்போதைய மக்கள் தொகை வாக்காளர் பட்டியல் சாலை பட்டியல், சாலை பட்டியல் அடர்த்தி வரி மதிப்பீடுகள் போன்ற காரணிகளை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சியினுடைய நிர்வாக எல்லைகள் மாற்றி அமைப்பதற்காக அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.
புதிய மண்டலங்களின் விவரங்கள்
அதாவது சென்னையில் இருக்கக்கூடிய மண்டலங்களினுடைய எண்ணிக்கை 15 லிருந்து 20 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அரசாணையில் கொளத்தூர், வில்லிவாக்கம், சேப்பாகம் - திருவல்லிக்கேணி, தியாகராய நகர், விருகம்பாக்கம், பெருங்குடி - சோழிங்கநல்லூர் ஆகிய 6 மண்டலங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே திருவொற்றியூர், மாதவரம் மண்டலங்களுடன் மணலி சேர்க்கப்பட்டு 14 மண்டலங்களாக உள்ள நிலையில், தற்போது 20 மண்டலங்களாக உயர்த்தப்பட்டு உள்ளன.
சென்னையின் மொத்த மண்டலங்களின் விவரங்கள்
திருவற்றியூர், மணலி, மாதாபுரம், தண்டையார்ப்பேட்டை, ராயபுரம், தி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரம்பாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் என 15 மண்டலங்களில் மணலி மண்டலம் மட்டும் பிரிக்கப்பட்டு, திருவெற்றியூர், மாதாவரம் மண்டலங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக புதிய மண்டலங்கள் சேர்க்கப்பட்டு இருப்பதால், மண்டலங்கள் எண்ணிக்கை 14 லிருந்து 20 ஆக உயர்த்தப்பட்டு உள்ளாதாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க - LIVE தமிழ்நாடு முதலமைச்சர் ஆவேசம்... சீமான் வழக்கு விவரம், சிலிண்டர் விலை உயர்வு
மேலும் படிக்க - தமிழ்நாட்டில் அண்ணாமலை இருக்கும் வரை திமுக-விற்கு தான் வெற்றி - நடிகர் எஸ்.வி.சேகர்!
மேலும் படிக்க - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் கூறிய முக்கிய செய்தி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









