Tamil Nadu Government : தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட (IATA-CANADA) நிறுவனத்தால் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இது தொடர்பான அறிவிப்புகளை தென்காசி மற்றும் அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு பல்வேறு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்தால் (IATA-CANADA) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் கேபின் க்ரூவ் (Cabin Crew), விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படை பயிற்சி, (Air Cargo Introductory + DGR) பயணியர் சேவை மற்றும் பயணசீட்டு முன்பதிவு அடிப்படை பயிற்சி, (Passenger Ground Services + Reservation Ticketing) சுற்றுலா போக்குவரத்து அடிப்படை பயிற்சி, (Foundation in Travel and Tourism) போன்ற வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இப்பயிற்சிப் பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்த 18 முதல் 23 வயது நிரம்பிய பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு ஆறு மாதமும், விடுதியில் தங்கி படிக்க வசதியும் பயிற்சிக்கான செலவினத் தொகை தாட்கோவால் வழங்கப்படும். இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் பட்சத்தில் IATA - International Air Transport Association–Canada மூலம் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும், பயிற்சி சான்றிதழ் உள்ளவர்கள் தனியார் விமான நிறுவனங்களிலும் (Indigo, Airlines, Spice Jet, Go First, Air India) சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும், சொகுசு கப்பல் மற்றும் சுற்றுலா துறையிலும் வேலைவாய்ப்பு பெறலாம். ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.20,000/- முதல் ரூ.22,000/-வரை பெறுவதற்று வழிவகை செய்யப்படும். பின்னர் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ரூ.50,000/- முதல் ரூ.70,000/- ஊதிய உயர்வு பெறலாம்.
இதுவரை தாட்கோ மூலம் விமான சேவை பயிற்சி பெற்ற 200 நபர்களுக்கு முன்னனி தனியார் நிறுவனங்களான Indigo, Air India, Menzies, Bird Aviation, Hyundai, iGo Tours, Wings vacation, Zenith Tours, Alhind Tours & Money Exchange போன்ற விமான நிறுவன சேவை மையங்களில் பணிபுரிந்து வருகின்றனர்,
இப்பயிற்சியில் சேருவதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.
அரியலூர், தென்காசி
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால், மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகம், அறை எண்.225, இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியரகம், அரியலூர் அணுகவும். தொலைப்பேசி எண்-04329-228315-னை தொடர்பு கொள்ளுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார். தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கவும் என அம்மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். மற்ற மாவட்டத்தினரும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க: வயதானவர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்த மிகப்பெரிய பரிசு!
மேலும் படிக்க: ஆதார் பதிவு, பள்ளி குழந்தைகளுக்கு குட் நியூஸ் - தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









