Tamil Nadu Government : கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த பெண்கள் தமிழ்நாடு அரசின் கிறித்தவ மகளிர் உதவும் சங்கம் குழுவில் உறுப்பினராக சேரலாம். அதற்கான அறிவிப்பு இப்போது தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த குழுவில் உறுப்பினராக சேரும் பெண்கள் கிறித்தவ சமுதாயத்தைச் சார்ந்த ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட மற்றும் வயதான பெண்களுக்கு உதவிடும் பணியில் ஈடுபடுவார்கள். அதாவது கிறிஸ்துவ சமூதாய பெண்களுக்கு கைவினை பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கவும், சிறுதொழில் புரிவதற்கு தேவையான பயிற்சிகள் வழங்குவார்கள். இதற்காக தகுதியுடைய பெண்கள் இப்போது விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விடுத்திருக்கும் அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது : கிறித்தவ மகளிர் உதவும் சங்கம் குழுவில் உறுப்பினராக சோ விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கிறித்தவ சமுதாயத்தைச் சார்ந்த ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட மற்றும் வயதான பெண்களுக்கு உதவிடும் வகையில் அவர்கள் சுயமாக தொழில் செய்து வருமானம் ஈட்ட வழிவகை செய்யும் பொருட்டு, கைவினை பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கவும், சிறுதொழில் புரிவதற்கு தேவையான பயிற்சிகள் அளித்து வாழ்வாதாரத்தை உயர்த்தவும், திருநெல்வேலி மாவட்ட கிறித்தவ மகளிர் உதவும் சங்கம் -2 மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை தலைவராகக் கொண்டு துவங்கப்பட உள்ளது.
இச்சங்கத்தில் ஒரு கௌரவ செயலாளர், இரண்டு கௌரவ இணைச்செயலாளர்கள், மூன்று உறுப்பினர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கும் கிறித்தவர்களில் சமூக பணிகளில் எவ்வித புகார்களுக்கும் இடமின்றி மிக்க ஆர்வமுடன் செயல்படும் தலைசிறந்த பிரமுகர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட உள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதரவற்ற கிறித்தவ ஏழை மற்றும் வயதான கிறித்தவ பெண்களுக்கு உதவிடும் வகையில் கிறித்தவ மகளிர் உதவும் சங்கத்தில் பணியாற்றிட விருப்பமுள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் தங்களது முழுவிவரங்கள் அடங்கிய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 30.06.2025க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
எனவே தகுதியுள்ளவர்கள் இந்த அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். பெண்களின் முன்னேறத்துக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் முக்கியமான திட்டங்களில் இதுவும் ஒன்று.
மேலும் படிக்க | புது பொலிவுடன் வள்ளூவர் கோட்டம்.. நாளை திறந்து வைக்கும் முதல்வர்!
மேலும் படிக்க | ரேஷன் கார்டு : கைவிரல்ரேகை பதிவு செய்யவில்லையா? தமிழ்நாடு அரசு முக்கிய அப்டேட்
மேலும் படிக்க | ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள் வாங்குவது கட்டாயமா? அதிகாரிகள் விளக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









