)
Tamil Nadu Government : ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நிரந்தர, தற்காலிக பட்டாசு உரிமதாரர்கள் மற்றும் வாணம் மத்தாப்பு தயார் செய்யும் நிறுவன உரிமைதாரர்களுடானான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது, பட்டாசுப் பொருட்களை உரிமம் பெற்ற இடத்தில் மட்டுமே வைக்க வேண்டும். உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள (நிரந்தர, தற்காலிக உரிமம் 100 கிலோ) அளவிற்கு அதிகமாக பட்டாசு பொருட்களை இருப்பு வைக்கக் கூடாது. உரிம காலத்திற்குள் பட்டாசு பொருட்களை வாங்க மற்றும் விற்க வேண்டும்.
பட்டாசு பொருட்களை வாங்கும் அளவு மற்றும் விற்பனை செய்யும் அளவினை பதிவேடு மூலம் பராமரிக்க வேண்டும். தணிக்கை அலுவலர்கள் தணிக்கையின் போது பதிவேட்டினை கட்டாயம் காண்பிக்கப்பட வேண்டும். வெடிபொருள்களை தயாரிப்பு நிறுவனங்களிலிருந்து எடுத்துவரும் நடைமுறை விதியினை கடைபிடிக்க வேண்டும். வெடிபொருட்களை வாகனங்களில் பாதுகாப்பாக எடுத்து வர வேண்டும். வெடிபொருட்களை எடுத்து வரும் பொழுது தணிக்கை அலுவலர்கள் தணிக்கை செய்யும்போது அனைத்து ஆவணங்களையும் காண்பிக்கப்பட வேண்டும். கடையின் அளவு 9 சதுர மீட்டருக்கு குறைவாகவோ, 25 சதுர மீட்டருக்கு அதிகமாகவோ இருக்க கூடாது. பட்டாசு உரிமம் கோரும் கடையினை ஒட்டியவாறு வேறு எந்த கடையும் இருக்கக்கூடாது. அதாவது பட்டாசு உரிமம் கோரும் கடை தனியே அமைந்திருக்க வேண்டும்.
பட்டாசு விற்பனை செய்யும் கடையில் எளிதில் வெளியேறும் வகையில் அவசர கால வழி இருக்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் பட்டாசு கடைகள் வைக்க அனுமதியில்லை. தரைத்தளம் தவிர மாடிகளிலும், நிலவறைகளிலும் பட்டாசுகளை சேமிக்கக்கூடாது. மேலும் வெளியேற 2 வழிகள் இருக்க வேண்டும். தீப்பிடிக்காத உலோகங்களிலான கூரை அமைக்கப்பட வேண்டும். பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, திரையரங்கு. கடைகள், சந்தை, தொழிற்சாலைகள், வழிபாட்டுத்தலங்கள், குடியிருப்புகள், இரயில்வே இருப்புப்பாதை, நெடுஞ்சாலைகள், நீர்நிலைகள், உயர் மின்னழுத்த கம்பிகள் மற்றும் அணைக்கட்டுகள் ஆகியவற்றிலிருந்து 50 மீட்டர் தொலைவிற்கு அப்பால் பட்டாசு கடை அமையப்பெற வேண்டும். எதிரெதிரே பட்டாசுக்கடைகள் அமையப்பெறக் கூடாது.
எளிதில் தீப்பற்றக்கூடிய எண்ணெய் மற்றும் காகிதங்களை கடைகளிலோ, கடைகளின் அருகிலோ சேமித்து வைக்கக்கூடாது. பட்டாசு சேமிக்கப்பட்டுள்ள இடத்தில் சமையல் செய்யவோ, LPG சிலிண்டர் வைக்கவோ கூடாது. தரமான மின் ஒயர்கள், இணைப்புகள், மின்சார சாதனங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனைத்து மின் ஒயர்களும் PVC PIPE-ன் வழியே செல்ல வேண்டும். மின்சார விளக்குகள் தொங்கக்கூடியதாக இருக்கக்கூடாது. சுவற்றில் பதிந்து இருக்க வேண்டும். பட்டாசு விற்பனை செய்யும் கடையின் முன் அலங்கார விளக்கு தோரணங்கள் அமைக்கக்கூடாது. கடையின் முன்பக்கத்தில் விளம்பரத்திற்காக பட்டாசுகளை தெரியும்படி வைத்திருக்கக்கூடாது. கடையின் அருகே பட்டாசு கொளுத்த அனுமதிக்க கூடாது.
ஒரே வளாகத்தில் 50 கடைகளுக்கு மேல் வைக்கக் கூடாது. இரண்டு பட்டாக கடைகளுக்கு இடைப்பட்ட தூரம் குறைந்தபட்சம் 15 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். பட்டாசு விற்பனை செய்ய உரிமம் பெற்ற இடத்தில் மட்டுமே பட்டாசு விற்பனை செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் வேறு இடத்தில் பட்டாசு விற்பனை செய்யக் கூடாது. புகை பிடிக்கக்கூடாது என்ற அறிவிப்பு பலகை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட | வேண்டும். ஒருவரையும் புகை பிடிக்க அனுமதிக்கக் கூடாது. அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பட்டாசு சேமித்து வைக்க கூடாது. இச்செயல் திட்டவட்டமாக தடை செய்யப்படுகிறது. உதிரி பட்டாசுகள் விற்பனை செய்யக்கூடாது.
போக்குவரத்து அதிகமாக இருக்கும் நேரங்களில் பட்டாசுகளை வாகனங்களில் ஏற்றவோ, இறக்கவோ கூடாது. பட்டாசு பெட்டிகளை ஏற்ற, இறக்க இரும்பினால் ஆன கொக்கிகளை பயன்படுத்த கூடாது. வாகனங்களிலிருந்து பட்டாக பெட்டிகளை இறக்கும்போது கடைகளுக்கு முன் செல்லும் மின்கம்பிகளில் உராய்வு ஏற்படாமல் பாதுகாத்தல் வேண்டும். அதிகளவில் வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்க கூடாது. பட்டாசு விற்பனை செய்யும் கடையினுள் விற்பனையாளர், வாடிக்கையாளர்கள் கைப்பேசி உபயோகிக்க கூடாது. பட்டாசு விற்பனை துவங்கிய பின் அவ்விடத்தில் மற்ற பொருட்ளை விற்பனை செய்ய கூடாது. கைத்துப்பாக்கியால் பட்டாசுகளை வெடித்து காண்பிக்க கூடாது.
மற்றும் பாதுகாப்பு தூரம் சுற்றிலும் விதிமுறைகளின்படி கடைபிடிக்கப்பட வேண்டும்.26. வாணம் மத்தாப்பு தயாரிக்கும் பணி நேரங்களில் வெடிக்கும் திறன் குறித்த சோதனைகள் ஏதும் மேற்கொள்ள கூடாது. பணியாளர்கள் காட்டன் உடைகளை அணிய அறிவுறுத்த வேண்டும். பணியாளர்களது உடைமைகளான செல்போன் உள்ளிட்ட பொருட்களை தனி அறையில் வைக்க வேண்டும்.
வயதான நபர்கள் மற்றும் குழந்தைகளை பணியில் அமர்த்த கூடாது. ஒரே சமயத்தில் 4 நபர்களுக்கு மேல் ஒரு கூடாரத்திற்குள் பணியாற்ற அனுமதி இல்லை. வாணம் மத்தாப்பு தயாரிப்பு பணி நடைபெறும் வளாகத்திற்குள் குழந்தைகளை அனுமதிக்க கூடாது. வெடிபொருள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் தரவுத்தளம் (Database) ஈரோடு, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் உருவாக்க வேண்டும். வெடிபொருள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரையும் தொழிலாளர் நல வாரியத்தில் சேர்க்க ஈரோடு. தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வெடிபொருள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிறுவனத்தினர் காப்பீடு செய்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ