மாதம் ரூ.18,000 சம்பளம்.. பெண்களுக்கு சூப்பர் சான்ஸ் - உடனே அப்ளை பண்ணுங்க

Tamil Nadu Government Jobs: சென்னை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

Written by - Umabarkavi K | Last Updated : Nov 14, 2025, 11:25 AM IST
  • சென்னையில் அரசு வேலை
  • மாதம் ரூ.18,000 வரை சம்பளம்
  • யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
மாதம் ரூ.18,000 சம்பளம்.. பெண்களுக்கு சூப்பர் சான்ஸ் - உடனே அப்ளை பண்ணுங்க

Chennai One Stop Recruitment 2025: தமிழக அரசு பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாவட்ட ரீதியாக பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது சென்னையில் அரசு வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, சென்னை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Add Zee News as a Preferred Source

Tamil Nadu Government Job: பணி குறித்த விவரம்

பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குதவற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதயி திட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (one stop Centre), பெண்கள் உதவி மையம் போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

Tamil Nadu Government Jobs: வழக்கு பணியாளர்

one stop Centre-ல் வழக்கு பணியாளர் பணிக்கு ஒரு காலி இடங்ள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சமூகப் பணியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில், அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் ஒரு வருட முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். மேலும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்தபட்ச ஒரு வருடம் அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும்.

இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பெண்கள் மட்டும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும், பெண்களுக்கு இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு 7 நாட்களிலும் 24 மணி நேரம் பணியாற்ற வேண்டியிருக்கும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெண் முழுக்க முழுக்க ஒப்பந்த அடிப்படையில் நிரப்பபடுகிறது. இந்த பணிக்கான மாதம் சம்பளமாக ரூ.18,000 வழங்கப்படுகிறது. ஒப்பந்த அடிப்படையில் நிரப்பபடுகிறது.

Tamil Nadu Government Jobs: பாதுகாப்பாளர்

one stop Centre-ல் பாதுகாப்பாளர் பணிக்கு இரண்டு பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். உள்ளூரைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 12ஆம் வகுப்பு முடித்த பெண்களாக இருக்க வேண்டும். இந்த பணி ஒப்பந்த அடிப்படையில் நிரப்பபடுகிறது. இந்த பணிக்கு சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ரூ.12,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

Tamil Nadu Government Jobs: பன்முக உதவியாளர்

one stop Centre-ல் பன்முக உதவியாளர் பணிக்கு இரண்டு பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பன்முக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதாவது அலுவலகத்தில் பராமரிப்பாளராக பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். உள்ளூரைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேவைப்படும் பட்சத்தில் சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும். இது பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இதற்கு மாத ஊதியமாக ரூ.10,000 வழங்கப்படும். மேற்கண்ட மூன்று பணிகளுக்கும் ஒருங்கிணைந்த சேவை மையம், தாம்பரம் சானடோரியம் இடத்தில் பணியமர்த்தப்படுகிறது.

விண்ணப்பிப்பது எப்படி?

மேற்கண்ட பணிகளுககு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Chennai.Nic.In என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்களுடன் நவம்பர் 21ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8வது தளம், சிங்காரவேலர் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை - 01 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க:  கிளாம்பாக்கம் போகவே வேண்டாம்... பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் கொடுத்த தமிழக அரசு

மேலும் படிக்க: மின் இணைப்பில் பெயர் மாற்றம் ஜஸ்ட் 5 நிமிடங்களில் செய்யலாம்? எப்படி? கட்டணம் எவ்வளவு? முழுவிவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

About the Author

Trending News