)
Nilgiris District Government Job Recruitment 2025: தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் துறை வாரியாக நிரப்பப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் உள்ள காலிப் பணியிடங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு நிரப்பப்படுகிறது. இந்த நிலையில், தற்போது நீலகிரி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, நகர்புறநலவார்வு மையம் மற்றும் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 33 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதன்படி, ஆலோசகர், மாவட்ட தர ஆலோசகர், சிகிச்சை உதவியாளர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், டேட்டா உதவியாளர், ரேடியோகிராப்பர், ஆடியோகிராபிஸ்ட், பல் டெக்னீஷியம் உள்ளிட்ட 33 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுகிறது. எனவே, தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட பணிகளுக்கு கல்வித்தகுதியை பொறுத்தவரை, அந்தந்த பணிகளுக்கு ஏற்ப மாறுபடும். குறிப்பாக, பல்நோக்கு உதவியாளர் பணிக்கு குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும், தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். டேட்டா உதவியாளர் பணிக்கு கணினி அறிவியல், ஐடி ஆகியவற்றில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும்.
சிகிச்சை உதவியாளர் பணிக்கு நர்சிங் தெரபிஸ்ட் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பல் டெக்னீஷியம் பணிக்கு அதற்கான சான்றிதழ் பெற்றிருப்பது அவசியம். இதுபோன்ற அந்தந்த பணிக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். எனவே, முழு விவரத்தை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
ஆலோசகர், மாவட்ட தர ஆலோசகர் ஆகிய பணிகளுக்கு மாத சம்பளமாக ரூ.40,000 வழங்கப்படும். மேலும், மாவட்ட ப்ரோகிராபர் மேஜேர் பணிக்கு ரூ.13000, சித்தா பணிக்கு ரூ.10000, ஆடியோதெரபிஸ்ட் பணிக்கு ரூ.23000, பல் டெக்னீஷியன் பணிக்கு ரூ.12600, ஆடியோகிராபிஸ்ட் பணிக்கு ரூ.17250, ரேடியோகிராப்பர் பணிக்கு ரூ.13300, டேட்டா உதவியாளர் பணிக்கு ரூ.15000, பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணிக்கு ரூ.8500 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட அனைத்து பணிகளும் முற்றிலும் தற்காலிகமானது என்றும் எந்த ஒரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் 11 மாதத்திற்கான ஒப்பந்த கடிதம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் Nilgris.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்தில் உள்ள விவரங்களை நிரப்பி, உரிய முகவரிக்கு நவம்பர் 28ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். District health officer, no.38 Jail hill road, Near CT Scan, Udhagamandalam - 643001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ