8,10ஆம் வகுப்பு படித்தவரா? மாதம் ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை.. சூப்பரான வாய்ப்பு

Tamil Nadu Government Job: கரூர் மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.   

Written by - Umabarkavi K | Last Updated : Feb 7, 2026, 01:37 PM IST
  • தமிழக அரசு வேலை
  • கரூர் மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு
  • எப்படி விண்ணப்பிக்கலாம்?
8,10ஆம் வகுப்பு படித்தவரா? மாதம் ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை.. சூப்பரான வாய்ப்பு

Karur Tamil Nadu Government Job: தமிழக அரசு பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பி வருகிறது. குறிப்பாக, மாவட்ட ரீதியாக உள்ள காலிப் பணியிடங்களையும் நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது கரூர் மாவட்டத்தில்  காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. எனவே, இந்த பணிக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

Add Zee News as a Preferred Source

பணி குறித்த விவரம்

கரூர் மாவட்டத்தில் பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. குறிப்பாக, ஊரக வளர்ச்சி மற்றும்  ஊராட்சி துறைகளில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.  பரமத்தி மற்றும் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதாவது, தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில்  அலுலவக உதவியாளர், இரவுக் காவலர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 

தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு 3 இடங்களும், ஈப்பு ஓட்டுநர், இரவுக் காவலர் பணிக்கு தலா ஒரு இடங்களும் நிரப்பப்படுகிறது. பரமத்தியில்  அலுவலக உதவியாளர் பணிக்கு 3 இடங்களும், இரவுக் காவலர் பணிக்க ஒரு இடங்களும் நிரப்பப்படுகிறது. எனவே, இந்த பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள் என்னென்ன?

பரமத்தியில் அலுவலக உதவியாளர் பணிக்கு  குறைந்தபட்சம் 18 வயது நிறைந்திருக்க வேண்டும்.  8ஆம் வகுப்பு தேர்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இன சுழற்சி அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.  இரவுக் காவல் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.  மேலும், 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். இதில் பொதுப்பிரிவில் 18 வயது 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பிசி, எம்பிசி பிரிவினர் 34 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி,எஸ்டி பிரிவினர் 37 வயதுக்குள் இருக்க வேண்டும். 

தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில்   அலுவலக உதவியாளர் பணிக்கு  8ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். ஈப்பு ஓட்டுநர் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி, மோட்டார் வாகன சட்டப்படி ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு குறையாமல் முன்  அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இரவுக் காவலர் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி, தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.  வயது வரம்பை  அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு அளிக்கப்படுகிறது. 

மாத சம்பளம்

தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.15700 முதல் ரூ.58,100, ஈப்பு ஓட்டுநர் பணிக்கு ரூ.19,500 முதல் ரூ.71,900, இரவுக் காவலர் பணிக்கு ரூ.15,700 முதல் ரூ.58,100 வழங்கப்படும்.  பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் பணிக்கும் ரூ.15,700 முதல் ரூ.58100 வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு கல்வித்தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிப்பது எப்படி?

கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Karur.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.  அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, விண்ணப்ப கட்டணமாக ரூ.100 அளிக்க வேண்டும்.எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.50 செலுத்த வேண்டும். commissioner, panchayat union paramathi என்ற பெயரில் வங்கி வரைவினை டிடி விண்ணத்துடன் இணைத்து அனுப்பப்பட  வேண்டும்.   விண்ணப்பத்தை பிப்ரவரி 13ஆம் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி  வரை நேரடியாகவோ அல்து தபால் மூலமாகவோ விண்ணப்பத்தை பரமத்தி, தாந்தோணி ஊராட்சியத்தில் அளிக்க வேண்டும். பிப்ரவரி 13ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி

ஆணையர், ஊராட்சி ஒன்றியம், தாந்தோணி - 639005, ஆணையர், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பரமத்தி, கரூர் மாவட்டம் -  639111 என்ற முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும். 

மேலும் படிக்க: சொந்த நிலம் இல்லாதவர்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை! தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்!

மேலும் படிக்க: மாதம் ரூ.13,000 வேண்டுமா? ரூ.16000 வேண்டுமா? இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் 3 முக்கிய அறிவிப்புகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News