)
Tamil Nadu Government : பெண்களின் வாழ்க்கையில் முன்னேறவும், படித்த இளைஞர்கள் சொந்த தொழிலில் முன்னேறவும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாவட்டம் வாரியாக செயல்படுத்தப்படும் இத்திட்டங்களுக்கு அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் உரிய காலத்தில் விண்ணப்பித்து பயனடைய வேண்டும். அந்தவகையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் 2 முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. பெண்கள் இலவச தையல் இயந்திரத்துக்கு விண்ணப்பிக்கலாம். பால் பண்ணை தொழிலில் ஈடுபட விரும்புபவர்கள், அது சார்ந்த பயிற்சியில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான அறிவிப்புகளை இங்கே பார்க்கலாம்
இலவச தையல் திட்டம்
சமூக நலத்துறையின் சார்பில் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2025-2026 நிதியாண்டுகளில் பயன்பெற உரிய ஆவணங்களுடன் இ - சேவை மையத்தில் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தகுதிகள்:
1.21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
2. ரூ.1,20,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் குறைந்தது 3 மாத கால முதல் 6 மாத கால தையல் பயிற்சி முடித்தவாகள் / சமூகநலத்துறையின் கீழ் செயல்படும் சேவை இல்லங்களில் தையல் பயிற்சி / தமிழக அரசின் திறன் மேம்பாட்டுத்திட்டத்தில் தையல் பயிற்சி / தீன்தயாள் உபாத்யாய கௌசல்ய யோஜனா திட்டத்தில் தையல் பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேற்கூறிய பயிற்சி முடித்தவர்கள் அதற்குரிய பயிற்சி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கு வட்டாட்சியரால் வழங்கப்பட்ட விதவை/கணவனால் கைவிடப்பட்டதற்கான சான்று, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2 மற்றும் அசல் சான்றுகளுடன் இ-சேவை மையத்தில் இணையத்தில் பதிவேற்றம் செய்து ஒப்புகை சீட்டுடன் அதன் நகல்களை சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.
இணையதளத்தில் விண்ணப்பித்த விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் இது குறித்த தகவலுக்கு 0424-2261405 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பால்பண்ணை தொழில் முனைவோருக்கான பயிற்சி
ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் (ஆவின்) மூலம் பால்பண்ணை தொழில் முனைவோருக்கான பயிற்சி வகுப்பு 03.11.2025 முதல் 12.12.2025 வரை 30 நாட்கள் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் (ஆவின்) மூலம் பால்பண்ணை தொழில் முனைவோருக்கான பயிற்சி வகுப்பு 03.11.2025 முதல் 12.12.2025 வரை 30 நாட்கள் நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் பங்கு பெறுவோருக்கான தகுதிகள்:
1. கல்வித்தகுதி - எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
2. வயது வரம்பு - 18 வயது முதல் 35 வரை
3. வேலை வாய்ப்பில்லாமல் இருப்பவர்களுக்கு மட்டும் இப்பயிற்சி வழங்கப்படும்
பால் பண்ணை தொழில் செய்வதில் விருப்பம் உள்ளவர்கள் இப்பயிற்சியில் வெற்றி நிச்சயம் இணையதளமானhttp://candidate.tnskill.tn.gov.in/skillwallet/ மூலம் பதிவு செய்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ