)
Tamil Nadu Government : தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII) மூலம், நகைத் துறையில் தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்காக, "தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி" (Gold Appraiser Training) என்ற சிறப்புப் பயிற்சி சென்னையில் நடைபெற உள்ளது.
முக்கிய தேதிகளும் நேரங்களும்:
பயிற்சி நடைபெறும் நாட்கள்: அக்டோபர் 27, 2025 முதல் அக்டோபர் 31, 2025 வரை ஐந்து நாட்கள்.
நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.
இடம்: EDII நிறுவனத்தின் சென்னை அலுவலக வளாகத்தில் (கிண்டி சிட்கோ தொழிற்பேட்டை) பயிற்சி நடைபெறும்.
பயிற்சியின் உள்ளடக்கங்கள்:
இந்தப் பயிற்சியில் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களின் தரம் மற்றும் மதிப்பீடுகள் குறித்துக் கற்றுத்தரப்படும். இது தொழில் தொடங்க மற்றும் வேலை வாய்ப்புகளைப் பெற மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முக்கியப் பாடத்திட்டங்கள்:
தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களின் தரம் அறிதல்.
- கேரட் மதிப்புகளைப் பிரித்தறிதல்.
- ஆசிட் சோதனை (Acid Test) முறைகள்.
- எடை அளவு மற்றும் இணைப்புகள்.
- விலை நிர்ணயிக்கும் முறைகள் (Board Rate).
- ஹால்மார்க் (Hallmark) உள்ளிட்ட முத்திரைகளைக் கொண்டு நகைகளின் தூய்மையைக் கண்டறியும் செயல்முறைகள்.
- ஆபரணக் கடன்களுக்கான கணக்கீட்டு முறைகள்.
- தங்க அணிகலன்கள் பற்றிய புதிய தொழில்நுட்பப் பயிற்சிகளும் அளிக்கப்படும்.
வேலைவாய்ப்புகளும் சலுகைகளும்: இந்தப் பயிற்சியை முடிப்பவர்களுக்கு பொதுத்துறை, கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளராக வேலைவாய்ப்பு மற்றும் கடன் பெறும் வாய்ப்புகள் உள்ளன. மேலும், பயிற்சியின் முடிவில் தகுதியுள்ளோருக்கு அரசின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். அத்துடன், தொழில் தொடங்குவதற்கான அரசுத் திட்ட உதவிகள் மற்றும் மானியங்கள் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன.
பதிவு விவரங்கள்: 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முன்பதிவு அவசியம்: பயிற்சியில் சேர விரும்புவோர் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.
தொடர்புக்கு: www.editn.in என்ற இணையதளம் மற்றும் தொலைபேசி எண்கள்: 9840114680 அல்லது 9360221280. அலுவலக நேரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10:00 மணி முதல் மாலை 5:45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
ஆயுர்வேத அழகு மற்றும் மூலிகைப் பொருட்கள் தயாரிப்புப் பயிற்சி:
ஆயுர்வேத அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மூலிகைப் பொருட்களைத் தயாரிக்கும் தொழிலில் ஆர்வம் உள்ள தொழில் முனைவோருக்காக, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII) சார்பில் சென்னையில் சிறப்புப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இது, சுயதொழில் தொடங்குவோருக்கு மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும்.
முக்கிய தேதிகளும் நேரங்களும்:
பயிற்சி நடைபெறும் நாட்கள்: நவம்பர் 4, 2025 முதல் நவம்பர் 6, 2025 வரை.
நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.
பயிற்சியில் கற்றுத் தரப்படுபவை: இந்தப் பயிற்சியில் அழகு மற்றும் மூலிகைப் பொருட்கள் தயாரிக்கும் முறைகள் செய்முறை விளக்கத்துடன் கற்றுக் கொடுக்கப்படும்.
தேங்காய் எண்ணெய், செம்பருத்தி, மூலிகைக் ஹேர் ஆயில் போன்ற மருத்துவ எண்ணெய்த் தயாரிப்புகள்.
மூலிகைப் பவுடர், மூலிகை முடி பராமரிப்புச் சீரம் (Hair Serum).
வேஸ் வாஷ் ஜெல், க்ரீம்கள், மூலிகை முடி பராமரிப்பு கிரீம்.
மூலிகை ஷாம்பூ, மூலிகை கண்டிஷனர், மூலிகை தைலம் போன்ற பல்வேறு வகையானப் பொருட்கள் தயாரித்தல்.
தொழில் ஆர்வலர்கள் எளிதாகத் தொழில் தொடங்க இந்தப் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பங்கேற்பதற்கான தகுதிகள்:
வயது/கல்வி: 18 வயது பூர்த்தியடைந்த, குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்/பெண் விண்ணப்பதாரர்கள் பங்கேற்கலாம்.
வசதிகள்: சென்னைக்கு வெளியே இருந்து வரும் ஆண்/பெண் பங்கேற்பாளர்களுக்குக் குறைந்த வாடகையில் தங்கும் வசதி ஏற்பாடு செய்ய விண்ணப்பிக்கலாம்.
சான்றிதழ்: பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
பதிவு மற்றும் தொடர்பு: முன்பதிவு அவசியம். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் முன்கூட்டியே முன்பதிவு செய்தல் அவசியம். www.editn.in இணையதளம் வழியாக பதிவு செய்யவும். தொலைபேசி 86688102600 / 8072914694 என்ற எணகளில் அலுவலக நேரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10:00 மணி முதல் மாலை 5:45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ. அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600032.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ