குட் நியூஸ்! ஆண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம் - எப்போது? அரசின் செம்ம திட்டம்

Tamil Nadu Government Free Bus Travel Scheme: 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும், இலவச பேருந்து பயண திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Written by - Umabarkavi K | Last Updated : Dec 8, 2025, 06:18 PM IST
  • ஆண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம்?
  • தமிழக அரசு எடுக்கும் முடிவு
  • விடியல் பயணத்தில் செம்ம மாற்றம்
குட் நியூஸ்! ஆண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம் - எப்போது? அரசின் செம்ம திட்டம்

Tamil Nadu Government Vidiyal Payanam Scheme: தமிழகத்தில் பெண்கள் பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட "விடியல் பயணம் திட்டம்" (மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம்) பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இந்தத் திட்டத்தை ஆண்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்தக் கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருவதாகவும், குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்தத் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add Zee News as a Preferred Source

மகளிருக்கான விடியல் பயணத் திட்டம்

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஆட்சிக்கு வந்தவுடன் மகளிருக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டமான 'விடியல் பயணம்' தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் பெண்கள் எந்த வித கட்டணமுமின்றி சாதாரண பேருந்துகளில் பயணித்து வருகின்றனர்இந்தத் திட்டத்தின் மூலம் தினமும் சராசரியாக 57.81 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் மூலம் வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ. 1000 வரை இலவசப் பயணத்தின் மூலம் சேமிக்க முடிகிறது. 

இத்திட்டம் தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, பிற மாநிலங்களிலும் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் மட்டும் அல்லாமல் ஆண்களுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து ஏற்கனவே, சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் பதிலளித்திருந்தார்.  அதாவது, "ஆண்களுக்கு இலவச பயணம் திட்டம் தொடர்பான கோரிக்கை வரவேற்கத்தக்கது. பெண்கள் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்ததால், பெரியார் கொள்கைகளுக்கு ஏற்ப பெண்களை மேம்படுத்த இலவச பயணம் வழங்கப்படுகிறது. எனவே, அரசின் நிதிநிலை சீராகும் போது, ஆண்களுக்கும் விடியல் பயணம் வழங்க பரிசீலிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

ஆண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம்

அனைத்துத் தரப்பு ஆண்களுக்கும் இலவசப் பயணத் திட்டத்தைச் செயல்படுத்தினால் ஏற்படும் நிதிச் சுமையைக் கருத்தில் கொண்டு, அரசு ஒரு மாற்றுத் திட்டத்தை பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது. அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவல்களின்படி, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு மட்டும் இலவசப் பேருந்து பயணத் திட்டத்தை விரைவில் செயல்படுத்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது.

வரவிருக்கும் தேர்தலை ஒட்டி, ஓரிரு மாதங்களில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "அனைத்துத் தரப்பு ஆண்களுக்கும் இலவச பயணத் திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. இதையடுத்தே, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இலவச பயணத் திட்டத்தைச் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும்” என்றனர். 

எனவே, 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், இதுகுறித்த அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணத் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியானால், அது ஓய்வூதியதாரர்கள் மற்றும் முதியோர் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க: மாதம் ரூ.50,000 சம்பளம்! டிகிரி முடித்தவர்களுக்கு சென்னை ஐகோர்ட்டில் வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

மேலும் படிக்க:  மாணவ, மாணவிகளே மாதம் ரூ.50,000 + ரூ.12,000 வேண்டுமா? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு வந்தாச்சு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News