)
TN Marriage Scheme 2025: தமிழக அரசு 2025-2026 ஆம் ஆண்டின் சட்டமன்ற பேரவையின் வரவு செலவு கூட்டத்தொடரில் நடைபெற்ற மானிய கோரிக்கையின் போது இலவச திருமண நிதி உதவி திட்டம் குறித்து முக்கிய தகவல் வெளியிடப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார்கள். அதாவது இவ்வாண்டும் 1000 இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பில் 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.70,000/- மதிப்பீல் சீர் வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரங்களை தெரிந்துக்கொள்ளுவோம்.
இலவச திருமண நிதி உதவி திட்டம் குறித்து வெளியிடப்பட்ட அரசாணையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்திடும் பொருட்டு, ஆண்டுதோறும் திருக்கோயில்களில் நடத்தப்படும் ஒரு இணை இலவச திருமணத்திற்கான செலவின தொகை ரூ.60.000/- த்தினை (4 கிராம் தங்கத்தாலி உட்பட) ரூ.70,000/- ஆக உயர்த்தி. ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 50 ஏழை எளிய இணைகள் வீதம் 20 மண்டலங்களில் 1000 இணைகளுக்கு உபயதாரர் நிதி கிடைக்கப் பெறாத பட்சத்தில் திருக்கோயில் நிதி மூலம் திருமணங்களை நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
1. திருமாங்கல்யம் 4 கிராம் தங்கம் (சந்தை விலைக்கு ஏற்ப..)
2.மணமகன் ஆடை - ரூபாய் 1,000/-
3.மணமகள் ஆடை - ரூபாய் 2,000/-
4. திருமணத்திற்கு மணமகன்,மணமகள் வீட்டார் 20 நபர்களுக்கு உணவு - ரூபாய் 2,000/-
5. மாலை மற்றும் புஷ்பம் - ரூபாய் 1,000/-
6. ஒரு பீரோ - ரூபாய் 7,800/-
7. ஒரு கட்டில் - ரூபாய் 7,500/-
8.ஒரு மெத்தை - ரூபாய் 2,200/-
9. இரண்டு தலையணை - ரூபாய் 190/-
10. ஒரு பாய் - ரூபாய் 180/-
11. இரண்டு கைக்கடிகாரம் - ரூபாய் 1,000/-
12. ஒரு மிக்ஸி - ரூபாய் 1,490/-
13. பூஜைப்பொருட்கள், பாத்திரங்கள் வகையறா - ரூபாய் 3,640/-
கூடுதலாக ரூ.30,000 + 4 கிராம் தங்கத்திற்கான சந்தை விலை.
இத்திட்டத்தின் படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருமண இணைகளின் ஆதார்கார்டு நகல், பிறப்பு சான்றிதழ் நகல் அல்லது பள்ளி மாற்று சான்றிதழ் நகல். முதல் திருமணம் என்பதற்கான சான்று, ஆண்டு வருமானம் ரூ.3,00,000/-க்கு கீழ் என்பதற்கான சான்று மற்றும் இந்து மதத்தை சார்ந்தவர் என்பதற்கான ஆவணங்களுடன் திருக்கோயில் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
இலவச திருமணம் திட்டத்தின் அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு தருமபுரி, உதவி ஆணையர் பிரிவில் இரண்டாம் கட்டமாக 18 இணைகளுக்கு 14.09.2025 அன்று, திருக்கோயில்கள் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்படவுள்ளதால், இலவச திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அதற்கான விண்ணப்பத்தினை தருமபுரி உதவி ஆணையர் அலுவலகம், திருக்கோயில் அலுவலகங்கள் மற்றும் இத்துறை சரக ஆய்வாளர் அலுவலகங்களில் இலவசமாக மூலம் பெற்று விண்ணப்பித்து பயன்பெறுமாறு தமிழக அரசு தருமபுரி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ