Tamil Nadu Government : தமிழ்நாட்டில் பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு முன்னோடி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. பெண்கள் சொந்த தொழில் செய்வதற்காக மிக மிக குறைந்த வட்டியில் அரசு சார்பில் கடனுதவி வழங்கும் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், இப்போது ஆஜீவிகா கிராமின் எக்ஸ்பிரஸ் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆஜீவிகா கிராமின் எக்ஸ்பிரஸ் திட்டம் என்றால் என்ன? இத்திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
ஆஜிவிகாகிராமின் எக்ஸ்பிரஸ் யோஜனா
ஆஜிவிகாகிராமின் எக்ஸ்பிரஸ் யோஜனா" திட்டத்திற்கு மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரக பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 2025-26ஆம் ஆண்டு பண்ணை சாரா வாழ்வாதார நடவடிக்கைகளின் கீழ், பின்தங்கிய மற்றும் தொலைதூர கிராமப்புறத்தில் உள்ள பொதுமக்கள் பயன்பெறக்கூடிய வகையில் போக்குவரத்து சேவைகள் மற்றும் தேவையான வசதிகளை வழங்கும் நோக்கத்திற்காக 'ஆஜிவிகா கிராமின் எக்ஸ்பிரஸ் யோஜனா” (AGEY) திட்டமானது ஏற்காடு மற்றும் பெத்தநாயக்கன் பாளையம் வட்டாரங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் விதிமுறைகள் என்ன?
மேலும், இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளை (சுய உதவிக்குழு உறுப்பினர்) தேர்வு செய்வதற்கு சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலிருந்து நிபந்தனைகளுக்குட்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. குறைந்தபட்சம் ஓராண்டு நிறைவடைந்த மகளிர் சுய உதவிக்குழுவாக இருக்க வேண்டும். சுய உதவிக்குழு உறுப்பினர் சுய உதவிக்குழுவில் இணைந்து குறைந்தபட்சம் ஓராண்டு பூர்த்தி செய்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 80 சதவிகிதம் சுய உதவிக்குழு கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டும். சுய உதவிக்குழுவில் இருந்து ஒரு முறையாவது கடன் பெற்று கடன் திருப்பம் செய்திருக்க வேண்டும்.
பெண்கள் விண்ணப்பிப்பது எப்படி?
சுய உதவிக்குழு கடன்/ சமுதாய முதலீட்டு நிதிக்கடன்/வங்கி கடன் ஆகியவையில் கடன் தவணை தவறியவராக இருக்க கூடாது. வாகனங்கள் இயங்கும் வழித்தடம் தொடங்கும் கிராமத்தில் வசிப்பவராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். சுய உதவிக்குழு றுப்பினரின் குடும்ப உறுப்பினர்கள் கனரக வாகனம் இயக்குவதற்கான உரிமம் பெற்றவர்களாகவும் மற்றும் வாகனத்தை இயக்க விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.
எனவே, மேற்காணும் தகுதியுள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் திட்ட இயக்குநர், மகளிர் திட்டம், இரண்டாம் தளம், அறை எண் 207, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சேலம் மாவட்டம் (தொடர்பு எண் 0427 2411552) என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட முகவரியில் விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 27.012026 க்குள் சமர்ப்பித்து பயன் பெறலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும் படிக்க | தமிழ்நாடு அரசின் 25 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் - யார் பெறலாம்? எப்படி விண்ணபிப்பது?
மேலும் படிக்க | தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு! ரூ.15 லட்சம் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









