Ajithkumar Lockup Death: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பகுதிகளில் உள்ள பத்ரகாளி கோவிலின் தற்காலிக ஊழியராக இருந்த அஜித்குமார் என்பவர் கடந்த சனிக்கிழமை (ஜூன் 28) காவல்துறையின் விசாரணையின்போது மரணமடைந்தார்.
Ajithkumar Lockup Death: நிவாரணம் வழங்கிய தமிழ்நாடு அரசு
இந்த வழக்கு விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய தமிழ்நாடு அரசு, இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காவல்துறை விசாரணையின் உயிரிழந்த அஜித்குமாரின் இளைய சகோதரர் நவீனுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி ஆணையை அமைச்சர் பெரியகருப்பன் இன்று வழங்கினார். மேலும், அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு இலவச மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும், திமுக சார்பில் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
Ajithkumar Lockup Death: தம்பிக்கு ஆவின் நிறுவனத்தில் வேலை
இந்நிலையில், அமைச்சர் பெரியகருப்பன் இன்று அஜித்குமாரின் குடும்பத்தினரை அவர்களின் இல்லத்தில் சந்தித்து தமிழ்நாடு அரசின் நிவாரணங்களை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் நேற்று தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் கூறியிருந்தார் என்றும் அதைத் தொடர்ந்து அவர்களின் குடும்பத்தினருக்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
மேலும், அஜித்குமாரின் தம்பி நவீன் ITI முடித்தவர் என்பதால், அவருக்கு ஏற்ற அரசு வேலையை கொடுக்க ஆலோசனை மேற்கொண்டு தற்போது ஆவின் நிறுவனத்தில் Technician பணி வழங்கப்பட்டுள்ளது என்றும் ஆரம்பத்தில் ரூ.30 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும், அதன்பின் அடுத்தடுத்த ஆண்டுகளில் அது உயரும் என்றும் அவர் பேசினார். மேலும், அவர்கள் குடியிருக்கும் வீட்டில் சிக்கல் இருப்பதாக கூறியதை தொடர்ந்து அவர்களுக்கு அரசின் நத்தம் நிலத்தில் இருந்து இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
Ajithkumar Lockup Death: திமுக சார்பில் ரூ.5 லட்சம்
மேலும், திமுக சார்பில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்த அவர் இவை அனைத்தும் முதற்கட்ட நிவாரணங்கள்தான் என்றார். தொடர்ந்து வருங்காலத்திலும் அவர்களுக்கு தேவைப்படும் உதவிகள் செய்துகொடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். மேலும், சிபிஐ விசாரணைக்கு அரசு முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Ajithkumar Lockup Death: சிபிஐக்கு மாற்றம்
மேலும் அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், "சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இவ்வழக்கில் சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடரலாம் எனவும் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தச் சம்பவத்தில் காவல் துறையைச் சேர்ந்த ஐவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான ஐயப்பாடும் எழுப்பப்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றிடுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன்.
சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசு வழங்கும். காவல்துறையினர் தங்களது விசாரணையின்போது மனித உரிமையைக் காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை நான் பலமுறை வலியுறுத்தி இருக்கிறேன். இதுபோன்ற மீறல் சம்பவங்களை நான் எப்போதும் ஏற்றுக்கொள்வது இல்லை. திருப்புவனத்தில் சில காவலர்கள் செய்த செயல், மன்னிக்க முடியாதது. இனி இதுபோன்ற செயல் எக்காலத்திலும் எங்கும் யாராலும் நடந்துவிடக் கூடாது என்பதை எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன். தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்திடும் என நம்பி காவல்துறையை நாடி வரும் பொதுமக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றிடும் வகையில் காவல்துறை எப்போதும் செயல்பட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் படிக்க | லாக்கப் மரண விசாரணையில் டென்ஷன் ஆன நீதிபதி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









