பேக்கரி பொருட்கள் தயாரிக்க தமிழக அரசு வழங்கும் பயிற்சி! எப்படி சேர்வது?

தமிழக அரசு சார்பில் மூன்று நாட்கள், உடல் நலத்திற்கு நன்மை தரும் சிறுதானியங்களை பயன்படுத்தி, பல்வேறு வகையான பேக்கரி பொருட்களை தயாரிப்பது குறித்து கற்று தரப்பட உள்ளது.

Written by - RK Spark | Last Updated : Nov 12, 2025, 02:06 PM IST
  • சுயதொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு..
  • தினை பேக்கரி பொருட்கள் தயாரிப்புக்கு..
  • அரசு பயிற்சி - முழு விவரம்!
பேக்கரி பொருட்கள் தயாரிக்க தமிழக அரசு வழங்கும் பயிற்சி! எப்படி சேர்வது?

இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களை தொழில்முனைவோர்களாக மாற்றும் நோக்கில், தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு பயிற்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தற்போது சிறுதானியங்களை கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரிப்பதற்கான மூன்று நாள் சிறப்புப் பயிற்சி முகாம் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு அரசு சான்றிதழும், தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படும்.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க: ஆதார் பதிவு, பள்ளி குழந்தைகளுக்கு குட் நியூஸ் - தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

பயிற்சியில் என்னென்ன கற்றுத் தரப்படும்?

நவம்பர் 25, 2025 முதல் நவம்பர் 27, 2025 வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், உடல் நலத்திற்கு நன்மை தரும் சிறுதானியங்களை பயன்படுத்தி, பல்வேறு வகையான பேக்கரி பொருட்களை தயாரிப்பது குறித்து விரிவாக கற்று தரப்படும். இதில், கோதுமை வெண்ணெய் பிஸ்கட், ராகி நட்ஸ் குக்கீ, கம்பு நெய் பிஸ்கட், கருப்பு கவுனி பாதாம் குக்கீ போன்ற விதவிதமான பிஸ்கட் வகைகள், ராகி சாக்லேட் கேக், தினை வாழை கேக், சோளம் கேரட் கேக் போன்ற கேக் வகைகள் மற்றும் மல்டிமில்லட் ரொட்டி, பால் ரொட்டி போன்ற பல வகையான ரொட்டி வகைகளும் அடங்கும். செய்முறை விளக்கத்தோடு, தொழில் தொடங்குவதற்கு அரசு வழங்கும் மானியங்கள் மற்றும் கடன் உதவிகள் குறித்தும் விளக்கமளிக்கப்படும்.

யாரெல்லாம் பங்கேற்கலாம்?

  • சுயதொழில் தொடங்குவதில் ஆர்வமுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் இந்த பயிற்சியில் கலந்து கொள்ளலாம். 
  • குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள், முன்பதிவு செய்வது அவசியம். 
  • வெளியூர்களில் இருந்து பயிற்சிக்கு வருபவர்கள் தங்குவதற்கு, குறைந்த வாடகையில் விடுதி வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த பயிற்சி, சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதுகுறித்த கூடுதல் விவரங்களைப் பெறவும், முன்பதிவு செய்யவும் [www.editn.in(http://www.editn.in) என்ற இணையதளத்தை பார்க்கலாம். மேலும், அலுவலக வேலை நாட்களில் 8668102600 மற்றும் 9943685468 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்புகொண்டு விவரங்களை கேட்டு அறியலாம். சுயதொழில் மூலம் வாழ்வில் உயர நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

மேலும் படிக்க: வயதானவர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்த மிகப்பெரிய பரிசு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News