Ration Shop Employees Salary Hike: தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் சுமார் 35000க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 26,000க்கும் அதிகமாக முழு நேரக் கடைகளாகவும், 10,000க்கு மேற்பட்ட பகுதி நேரக் கடைகளாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடைகள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, எண்ணெய், சர்க்கரை, பருப்பு என அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
Ration Shop: ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு
தமிழகத்தில் 2.25 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்கள் மாதந்தோறும் ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் செய்து வருகின்றனர். ரேஷன் கடைகளில் தொகுப்பூதியம் மற்றும் நிரந்தர பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக, தொகுப்பூதியத்தில் வேலை பார்ப்பவர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு கோரி வருகின்றனர். இந்த நிலையில் தான் தமிழக அரசு ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட அரசாணைப்படி, கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் புதிதாக நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு பணியில் சேர்ந்த ஒரு வருடம் மட்டும் ஓராண்டு தொகுப்பூதியம் வழங்கப்படும். ரேஷன் கடைகளில் பணியில் சேர்ந்த விற்பனையாளர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.7500, கட்டுநர்களுக்கு ரூ.66000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓராண்டு பணி முடித்தவர்களுக்கு காலமுறை ஊதியமாக விற்பனையாளர்களுக்கு ரூ.9,900 முதல் ரூ.39,600, கட்டுநர்களுக்கு ரூ.9,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படும். பணியில் சேர்ந்த ஓர் ஆண்டிற்கு பிறகு கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு காலமுறை ஊதியமாக ரூ.9,900 முதல் ரு.39,600, கட்டுநர்களுக்கு ரூ.9000 முதல் ரூ.35,000 வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ration Shop: தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு
மேலும், ஓராண்டு பணி முடித்த விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு முந்தைய ஊதிய கற்றையில் தற்போது பெற்று வரும் அடிப்படை ஊதியத்தினை கணக்கில் கொண்டு அதற்கு 15% சேர்த்து வரும் கூடுதல் தொகையினை அடுத்த 10 ரூபாய்க்கு முழுமையாக்கி அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படும். அகவிலைப்படியை பொறுத்தவரை, புதிதாக நிர்ணயிக்கப்படக்கூடிய அடிப்படை ஊதியத்தில் 55% அகவிலைப்படி பெற அனுமதிக்கப்படுகிறது.
பின்னர், அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது அரசு அறிவிக்கும் அகவிலைப்படி உயர்வை இப்பணியாளர்களுக்கும் பின்பற்றப்படும். ஆண்டு ஊதிய உயர்வை பொறுத்தவரை, தற்போது நடைமுறையில் இருக்கும் 3% ஆண்டு ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்படும். வீட்டு வாடகைப்படி, அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் (அல்லது) சென்னை மாநகராட்சிக்குள் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு முறையே ரூ.1500 மற்றும் ரூ.1200 இவற்றில் எது குறைவோ அதை வழங்கப்படும்.
Ration Shop: நியாயவிலைக்கடைப் படி
இதர பகுதிகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு முறையே ரூ.1200 மற்றும் ரூ.1000 இவற்றில் எது குறைவோ அதை வழங்கப்படும். நகர ஈட்டுப்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடிப்படை ஊதியத்தில் 5% அல்லது சென்னை மாநகராட்சிக்குள் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு முறையே ரூ.700 மற்றும் ரூ.600 இவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர்களுக்கு மருத்துவப்படி ரூ.300 வழங்கப்படும். அரசால் மலைவாழ்ப்பகுதி என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர் மற்றும் கட்டுநர்களுக்கு, மலைவாழ்ப்படி மாதம் ஒன்றுக்கு அடிப்படை ஊதியத்தில் 20 சதவீதம் அல்லது அதிகபட்சம் மாதம் ஒன்றுக்கு ரூ.1500 வழங்கப்படும்.
சராசரி கடல் மட்டத்திலிருந்து மலை வாழ்விட உயரம் 1000 மீட்டருக்கு மேல் உள்ள பகுதிகளில் குளிர்காலப்படி மாதம் ஒன்றுக்கு ரூ.400 வழங்கப்படும். குளிர்காலப்படி குளிர்காலங்களில் மட்டும் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான வழங்கப்படும். போக்குவரத்துப்படி தற்போதுள்ளவாறு ரூ.2500 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இனி கிளாம்பாக்கம் சென்று அலைய வேண்டாம்.. தமிழக போக்குவரத்து கழகம் குட் நியூஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









