தமிழக அரசின் மானிய விலையில் பெண்களுக்கான ஸ்கூட்டர் திட்டம்! இன்றும் வாங்க முடியுமா?

Women Scooter Scheme: தினசரி வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உதவும் வகையில் மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் தமிழகத்தில் நடைமுறையில் இருந்தது.

Written by - RK Spark | Last Updated : Apr 8, 2025, 11:00 AM IST
  • தமிழக அரசின் ஸ்கூட்டர் திட்டம்.
  • பயனர்களுக்கு மானியம் வழங்கப்பட்டது.
  • ரூ. 25,000 மானியம் வழங்கப்பட்டது.
தமிழக அரசின் மானிய விலையில் பெண்களுக்கான ஸ்கூட்டர் திட்டம்! இன்றும் வாங்க முடியுமா?

Women Scooter Scheme: மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் பெண்களுக்கான பல்வேறு சிறப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. அவற்றில் பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் முதன்மையாக இருந்தது. வேலைக்கு செல்லும் பெண்களின் சுமையை குறைக்க அம்மா இருசக்கர வாகன திட்டம் என்ற பெயரில் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டி வழங்கப்பட்டது. பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருந்து வேலைக்கு செல்லும் சூழலை தவிர்க்க இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? எவ்வளவு மானியம் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ED ரெய்டு! அதிரடி சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகள்..

அம்மா இருசக்கர வாகன திட்டம்

தமிழக அரசு 2018 ஆம் ஆண்டு அம்மா இருசக்கர வாகன திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம் ஸ்கூட்டர் வாங்குவதற்கு ரூபாய் 25,000 ரொக்கம் அல்லது 50% மானியம் வழங்கப்பட்டது. பலரும் இந்த திட்டத்தில் பயன் அடைந்து வந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். இருப்பினும் அடுத்த தேர்தலில் ஆட்சி மாறும் பட்சத்தில் மீண்டும் இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர அதிக வாய்ப்பு உள்ளது.

இந்தத் திட்டத்தின் நோக்கம்

ஒவ்வொரு பெண்களும் தனது கணவர் அல்லது குடும்பத்தை நம்பி இல்லாமல் சொந்தக்காலில் நின்று உழைக்க வேண்டும் என்ற நோக்கிலும், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உதவும் வகையிலும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இரு சக்கர வாகனம் கொடுத்தால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்று இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஏழைப் பெண்கள் இந்த திட்டத்தில் அதிக அளவில் பயன் அடைந்தனர். அரசு வழங்கும் இந்த மானியம் நேரடியாக பயனாளர்களின் வங்கி கணக்கிற்கு டெபாசிட் செய்யப்பட்டது.

மானியத் தொகை போக, கூடுதலாக உள்ள தொகையை பயனாளர்கள் செலுத்தி ஸ்கூட்டர் வாங்கிக் கொள்ளலாம். கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்ததாக சொல்லப்படுகிறது.  இந்த திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்ச கல்வி தகுதி எதுவும் இல்லை என்றாலும், 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக ஆக இருக்க வேண்டும். குறிப்பாக லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். அதேபோல குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டரை லட்சத்திற்கும் கீழ் இருக்க வேண்டும். 125 சிசிக்கு குறைவாக திறன் கொண்ட எந்த ஒரு கியர் இல்லாத வாகனங்களையும் இந்த திட்டத்தில் வாங்கிக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | சட்டப்பேரவையில் அதிமுகவினர் சஸ்பெண்ட் - வெளியே இபிஎஸ்... உள்ளே செங்கோட்டையன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News