ஓசூர் சர்வதேச விமான நிலையம்... தமிழ்நாடு அரசின் எடுத்த வைத்த அடுத்த ஸ்டெப் - புது அப்டேட்

Hosur International Airport: ஓசூர் விமான நிலையம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில், தொழில்நுட்ப ரீதியில் அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசு மத்திய அரசுக்கு சமர்பித்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Nov 16, 2025, 04:51 PM IST
ஓசூர் சர்வதேச விமான நிலையம்... தமிழ்நாடு அரசின் எடுத்த வைத்த அடுத்த ஸ்டெப் - புது அப்டேட்

Hosur International Airport Latest News Updates: தமிழ்நாடு - கர்நாடக மாநில எல்லையான, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நகரம், ஓசூர். ஓசூர் நகரம் பெங்களூரு நகரில் இருந்து ஒரு மணிநேரத்தில் பயணிக்கும் தூரத்தில்தான் இருக்கிறது. மேலும், ஓசூர் நகரம் பெரும் தொழில் நிறுவனமாக வளர்ந்து வரும் நிலையில், அங்கு சர்வதேச விமான நிலையம் கொண்டுவரவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source

Hosur International Airport: வந்தது லேட்டஸ்ட் அப்டேட்

இந்நிலையில், தமிழ்நாடு அரசு அமைக்கும் இந்த ஓசூர் சர்வதேச விமான நிலையத்தின் முதற்கட்ட பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஓசூர் விமான நிலையம் குறித்து முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, விமான நிலையத்தின் சைட் கிளையரன்ஸ்க்காக, விமானப் போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசு விண்ணப்பத்தை அனுப்பியுள்ளது என தகவல்கள் கூறப்பட்டது. இதன்மூலம், முதல்கட்ட ஒப்புதலை பெறும் நடவடிக்கை தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது. இதன்மூலம், ஓசூரில் எந்த இடத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என்பது தமிழக அரசின் சார்பில் முடிவு செய்யப்பட்டுவிட்டது என கூறப்படுகிறது.

Hosur International Airport: சூளகிரி பகுதியில் புதிய விமான நிலையம்

ஓசூரில் பேரிகை, பாகலூர் ஆகிய பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள சூளகிரி என்ற தாலுகாவில் விமான நிலையத்திற்கான போதிய இடம் உள்ளதாக கண்டறியப்பட்டிருக்கிறது. சூளகிரி பகுதியின் சமதள நிலப்பரப்பும், வான் பரப்பில் எவ்வித தடைகள் இன்றி பறக்கும் சூழல் போன்றவை சாதகமாக இருக்கும் என்பதால் இந்த இடம் தேர்வாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த இடத்தில் விமான நிலையம் அமைக்கப்படும்பட்சத்தில், சுமார் 3 கோடி பயணிகளை கையாளும் வகையில், இது திறன் கொண்டதாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

Hosur International Airport: 2வது முறையாக விண்ணப்பம்

மேலும், இதுதொடர்பாக, பாதுகாப்பு துறை அமைச்சகத்திடம் இருந்து வான் பரப்பில் பறப்பதற்கான கட்டுப்பாடுகள் தொடர்பான விலக்கை அளிக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை விலக்கு எதுவும் அளிக்கப்படவும் இல்லை, அதற்கு சாதகமான சூழலும் கைக்கூடி வரவில்லை. கடந்த ஜூன் மாதம் பாதுகாப்பு துறையிடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பித்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாகவும் விண்ணப்பித்துள்ளனர்.

ஓசூரில் ஏற்கெனவே அமைந்துள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில்தான், விமானங்களை இயக்கி சோதனை மேற்கொள்ளப்படுகிறது. அப்படியிருக்க, இதற்கு அருகில் விமான நிலையம் அமைக்கப்படும்பட்சத்தில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் விமானங்கள் உடன் பயணிகள் விமானங்கள் பறப்பதில் நெருக்கடி சிக்கல் எழுந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனாலேயே, வான் பரப்பில் பறப்பதற்கான கட்டுப்பாடுகளை விலக்கக் கோரியதற்கு, பாதுகாப்புத் துறை ஒப்புதல் அளிக்க காலதாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

Hosur International Airport: ஒப்புதல் வர தாமதமாகும்..

இந்நிலையில், தொழில்நுட்ப ரீதியில் அனைத்து ஆவணங்களையும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மத்திய அரசிடம் சமர்பித்திருக்கிறார். பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து இதற்கு ஒப்புதல் வர இன்னும் 6 மாதங்களுக்கு மேலாகும் என்றும் தகவல் கூறுகின்றன. அதன்பிறகே, விமான நிலையத்தின் இரண்டாம் கட்டமாக கொள்கை ரீதியிலான ஒப்புதலுக்கு விண்ணப்பம் அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.

Hosur International Airport: எப்போது வரும் ஓசூர் விமான நிலையம்?

பெங்களூருவின் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிதாக எவ்வித விமான நிலையமும் அமைக்கப்படக் கூடாது என மத்திய அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு வரும் வகையில் முன்னெடுக்க இயலாது என்றும் கூறபப்டுகிறது. மத்திய அரசின் ஒப்பந்தம் காலாவதியாக இன்னும் 8 ஆண்டுகள் ஆகும் என்பதால், அதுவரை கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே புதிய விமான நிலையங்களை அமைக்க இயலாது என்றும் கூறப்படுகிறது. எனவே அதுவரை, விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு, மத்திய அரசின் ஒப்பந்தம் முடிந்த பின்னர் அதை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது இதர்கு மாற்று வழி ஏதேனும் உள்ளதா என்பது இனி வரும் நாள்களில் தெரியவரும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பெங்களூரு ஓசூர் மெட்ரோ வாய்ப்பே இல்லை: கைவிரித்த கர்நாடகா - என்ன பிரச்சனை?

மேலும் படிக்க | மைசூர், பெங்களூரு டூர் பிளான்... 3 நாள் மஜா சுற்றுலா - மொத்தம் எவ்வளவு கட்டணம்?

மேலும் படிக்க | பெங்களூரு ஹவுஸ் ஓனர்களை வறுத்தெடுக்கும் வெளிநாட்டவர்... அதிக வாடகையால் ஷாக்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News