தமிழ் தெரிந்தால் போதும்! ரூ.50,000 சம்பளத்துடன் அரசு வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

Tamil Nadu Government Jobs: தென்காசி மாவட்டத்தில் சங்கநாராயண சுவாமி திருக்கோயிலில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.   

Written by - Umabarkavi K | Last Updated : Jan 18, 2026, 05:34 PM IST
  • அறநிலையத்துறையில் வேலை
  • தென்காசி கோயிலில் வேலைவாய்ப்பு
  • மாதம் ரூ.50,000 சம்பளம்
தமிழ் தெரிந்தால் போதும்! ரூ.50,000 சம்பளத்துடன் அரசு வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

Tenkasi Tamil Nadu Government Jobs: தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.  அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் உள்ள பணியிடங்களை அறநிலையத்துறை நிரப்பி வருகிறது. இதற்காக மாவட்ட ரீதியாக நிரப்பி வருகிறது. அந்த வகையில், தற்போது  வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, தென்காசி மாவட்டத்தில் சங்கநாராயண சுவாமி திருக்கோயிலில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்து முழுமையாக இங்கு பார்ப்போம். 

Add Zee News as a Preferred Source

பணி குறித்த விவரம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கநாராயண சுவாமி கோயிலில் உள்ள பாரா பணியிடத்திற்கு நேரடி நியமனம் மூலம் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். பாரா பணிகளுக்கு ஒரு இடங்கள் நிரப்பப்படுகிறது. பாரா பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். இதற்கு மாத சம்பளமாக ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாரா பணியிடத்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க கோயில் அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பத்தை பெற்று சமர்ப்பிக்க வேண்டும். தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து ஜவனவரி 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 30ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

நிபந்தனைகள் என்னென்ன?

இந்து மதத்தை சார்ந்தவராகவும் (உரிய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்) இறை நம்பிக்கை உடையவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருத்தல் வேண்டும். தொற்றுநோய், மனநிலை குன்றிய குறைபாடுகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

 நீதிமன்றத்தில் தண்டணை அடைந்தவர்கள், பட்ட கடனை தீர்க்க முடியாதவர்கள் என நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டவர்கள், அரசு பணியிலிருந்து பொது ஸ்தாபனங்களில் இருந்தும் இதர திருக்கோயில்களில் இருந்தும் பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், திருக்கோயிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள், அவர்களின் வாரிசுதாரர்கள் ஆகியோர்கள் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.

குற்றவியல் வழக்கு எதுவும் இல்லை என காவல்துறையினரிடமிருந்து நன்னடத்தைச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேற்படி சான்று 01.01.2026க்கு பிறகு பெற்றிருக்க வேண்டும். நன்னடத்தை உடையவராக இருக்க வேண்டும். இதற்கு அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை 15.01.2026 முதல் 30.01.2026 வரை திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருக்கோயில் அலுவலகத்தில் 30.01.2026 அன்று மாலை 05.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. எனவே, தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க: பொங்கல் பரிசு ரூ.3,000 பெறாதவர்களுக்கு கடைசி வாய்ப்பு! தவறினால் பணம் கிடைக்காது.. தமிழக அரசு அறிவிப்பு!

மேலும் படிக்க: ஓசூர் ஏர்போர்டுக்கு சிக்கல்... மத்திய அரசு அனுமதி மறுத்தது ஏன்? - தமிழக அரசு என்ன செய்யும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News