)
Thayumanavar Scheme: தமிழக மக்களின் முக்கிய ஆவணமாக ரேஷன் அட்டை இருந்து வருகிறது.. ரேஷன் கார்டுகள் மூலம் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர். ரேஷன் அட்டைகள் மூலம் வருமை கோட்டின் கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு மாதந்தோறும் மானிய விலையில் அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கும் விளிம்பு நிலை மக்களுக்கு இது பெரிதும் பயனுடையதாக உள்ளது.
இந்த பொருட்களை அருகில் இருக்கும் நியாய விலைக் கடைகளுக்கு சென்று, மக்கள் மாதந்தோறும் வாங்கி வருகின்றனர். ஆனால், மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு மாதந்தோறும் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, அவர்களின் சிரமத்தை போக்க, தமிழக அரசு தாயுமானவர் என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது.
இந்த திட்டம் மூலம் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பெரிதும் வரவேற்பை பெற்று வருகிறது. மாதந்தோறும் 21.70 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு 2வது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் பொருட்களை விநியோகம் செய்வதற்காகவே, வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் எப்போது வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற தேதியும் அறிவிக்கப்பட்டு வருகிறது. 2025 அக்டோபர் மாதம் கூட, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 4,5ஆம் தேதிகளில் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், நவம்பர் மாதத்திற்கு எப்போது விநியோகம் செய்யப்படும் என கேள்வி எழுந்துள்ளது.
எனவே, நவம்பர் 3,4ஆம் தேதிகளில் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும் என மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். இந்த தகவலை அனைத்து நியாய விலைக் கடைகளில் உள்ள பலகையிலும் எழுதி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், தாயுமானவர் திட்டத்தின் கீழ் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. எப்போதுமே, இரண்டாவது சனி,ஞாயிற்று கிழமைகளில் ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், இம்மாதம் முன்கூட்டியே வருவதால் ரேஷன் அட்டைதாரர்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்படுகிறது.
மேலும் படிக்க: ஹேப்பி நியூஸ்.. 2 மாதங்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ