10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும், தனியார் பள்ளி கல்வி கட்டணத்தை ஏற்கும் தமிழ்நாடு அரசு
Tamil Nadu Government will pay Private School Fees For 10th Student Scheme | 10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் மேல்நிலை வகுப்பு கட்டணங்களை தமிழ்நாடு அரசு செலுத்தும் திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Nadu Government 10th Student Scholarship Scheme | கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் மேல்நிலை வகுப்பில் சிறந்த கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக கல்வி கட்டணத்தை தமிழ்நாடு அரசே செலுத்தும் திட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தமிழகத்தின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் மூலம் "தமிழ்நாட்டின் சிறந்த பள்ளிகளில் உயர்நிலைக் கல்வியைத் தொடரத் தகுதியுள்ள மாணவர்களுக்கான திட்டம்" செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 10 மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு மேல்நிலை வகுப்பை தமிழ்நாட்டில் இருக்கும் எந்த கல்வி நிறுவனத்தில் வேண்டுமானாலும் படிக்கலாம்.
அந்த மாணவ மாணவிகளின் கல்வி கட்டணத்தை தமிழ்நாடு அரசு செலுத்தும். ஆனால், ஒரே கண்டிஷன் என்னவென்றால், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அந்த மாவட்டத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் பட்டியலில் டாப் 10 இடத்தில் இருக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் சேர்ந்து கூட படிக்கலாம். கல்விச் செலவு முழுவதும் அரசே ஏற்றுக் கொள்ளும்
திட்டம் :
தமிழ்நாடு அரசின் தனியார் பள்ளிகளில் உயர்நிலைக் கல்வியைத் தொடர்வதற்கான முழு நிதி உதவி வழங்கும் திட்டம்.
தகுதி
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவராக இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC)/ மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC)/ Denotified Communities (DNC) யைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். 10வது பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்றவர்களில் அதிக மதிப்பெண் பெற்ற டாப் 10 மாணவர்களில் ஒருவராக இருக்க வேண்டும். அரசு/அரசு உதவி பெறும்/தனியார் பள்ளியில் படித்துக் கொண்டிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹1,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்ப செயல்முறை : ஆஃப்லைன்
1. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர், சம்பந்தப்பட்ட பள்ளியில் இருந்து விண்ணப்பப் படிவத்தை வாங்க வேண்டும்.
2. விண்ணப்பப் படிவத்தில், அனைத்து தகவல்களையும் கட்டாயம் நிரப்ப வேண்டும். பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தை ஒட்டவும்.
3. முறையாக பூர்த்தி செய்யப்பட்ட மற்றும் கையொப்பமிடப்பட்ட விண்ணப்பப் படிவத்தை ஆவணங்களுடன் பள்ளியில் சமர்ப்பிக்கவும்.
4. விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இருந்து ரசீது அல்லது ஒப்புதலைக் கோரவும்.
5. சமர்ப்பித்த தேதி மற்றும் நேரம் மற்றும் தனிப்பட்ட அடையாள எண் போன்ற அத்தியாவசிய விவரங்கள் ரசீதில் இருப்பதை உறுதிசெய்யவும்.
தேவையான ஆவணங்கள்
1. ஆதார் அட்டை அல்லது ரேஷன் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் அல்லது பிற ஆவணங்கள்.
2. சாதி சான்றிதழ் (BC/MBC/DNC).
3. 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்.
4. வருமானச் சான்று (பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹1,00,000/-க்கு குறைவாக இருக்க வேண்டும்).
5. வேறு ஏதேனும் ஆவணங்கள் (தேவைப்பட்டால்).
இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இந்த திட்டம் பற்றிய கூடுதல் தகவல் தேவைப்பட்டால் படித்த பள்ளி, அரசு கல்வித்துறை ஆகியவற்றை தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ